சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறப்புக்கு காரணமான அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈராக் அறிவித்திருந்த நிலையில் இன்று அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இராக்கில் நடந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுலைமானியின் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, 12-க்கும் அதிகமான இரானிய ஏவுகணைகள், இராக்கில் உள்ள அமெரிக்கத் தளம்மீது ஏவப்பட்டுள்ளன. அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ளது. “இரான் புரட்சிகர விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்க வீரர்கள் ‘ஆபரேஷன் தியாகி சுலைமானி’-க்காக இன்று (நேற்று) வெற்றிகரமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒருவேளை, அமெரிக்காவின் நட்பு நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்தினால், நிச்சயம் அவர்கள் ராணுவ பதிலடிக்கு இலக்காவார்கள் என எச்சரித்துக்கொள்கிறோம்” என்று இரான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com