ஹிஜாப் அணியாத 61 வயது நடிகை… சிறை தண்டனை விதித்த அரசு… கூடவே கட்டுப்பாடுகள்?

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

ஈரான் அரசு கட்டுப்பாடான மத நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தலையில் ஹிஜாப் அணியாமல் திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்ட 61 வயது நடிகை ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கும் தகவல் உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரான் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே ஹிஜாப் அணியாமல் வெளியே வரும் பெண்கள் மீது கடும் அடக்குமுறைகளும் சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹிஜாப் அணியாமல் குர்திஷ் வம்சாவளியை சேர்ந்த 22 வயது இளம்பெண் மஹ்சா அம்னி வெளியே வந்ததால் அவர் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி கடும் கண்டனங்களைச் சந்தித்து.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 52 வயது நடிகையான ஹெங்கமே காசியா என்பவர் வீடியோ ஒன்றில் ஹிஜாப் அணியாமல் தனது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். இதுதான் என்னுடைய கடைசி வீடியோவாக இருக்கும் என்று கடந்த நம்பவரில் தெரிவித்து இருந்தார். இதேபோல 70 படங்களுக்கு மேல் நடித்த ரியாஹி எனும் நடிகையும் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக ஈரானில் இளம்பெண்களும் நடிகைகளும் பல்வேறு சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் 61 வயது நடிகையான அஃப்சநெஹ் பாயேகன் என்பவர் திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் தலையில் ஹிஜாப் அணியாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ஹிஜாப் அணியாமல் வெளியே சென்ற குற்றத்திற்காக அந்நாட்டு அரசு நடிகை அஃப்சநெஹ் – க்கு 2 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் நடிகையின் பெற்றோர் நடிகைக்கு மனநிலை சரியில்லை. 61 வயது ஆகிவிட்டது எனப் பல காரணங்களைக் கூறி வாதாடி இருந்தனர். இதனால் சிறை தண்டனையை குறைக்காத அந்த நாட்டு அரசு ஒவ்வொரு வாரமும் சிறையில் நடிகைக்கு மனநல சிகிச்சை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இனிமேல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தவும் ஈரானை விட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் அணியாமல் திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட நடிகைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கும் சம்பவம் உலக அளவில் பெரிய அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.

More News

இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்கின்றேன்: தமன்னாவின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை தமன்னாவின் 'காவாலா' பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியதை அடுத்து இந்த பாடலை ஹிட் ஆக்கிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

மணிப்பூர் விவகாரம்: ஆவேசமான கருத்தை கூறிய பிரியா பவானி சங்கர்..!

மணிப்பூர் விகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு

'மாமன்னன்' வெற்றியால் வடிவேலுவை அரசியலுக்கு இழுக்கும் கமல்.. ஒப்புக்கொள்வாரா வைகைப்புயல்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலு ஒரு சீரியசான கேரக்டரில் நடித்த நிலையில் அவருக்கு மேலும் அதே போன்று கேரக்டர்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதையடுத்து

ஏஐ- தொழில்நுட்பத்தில் செக்ஸ் ரோபோ? உறவுக்கான அர்த்தத்தையே மாற்ற போகிறதா?

மின்சாரத்தால் இயங்கக்கூடிய செக்ஸ் பொம்மை, ரோபோக்கள் குறித்த விஷயங்களை எல்லாம் இதற்கு முன்பு கேட்டிருப்போம்

ஜெய்ஸ்வாலின் சிறப்பே இதுதான்? இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் ஜாம்பவான்

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக அதுவும் எடுத்த எடுப்பிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ் மேனாக களம் இறங்கி விளையாடிவரும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால்