நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை.. ஒவ்வொரு ஆடையாக கழற்றி எறிந்த பிரபல நடிகை!
- IndiaGlitz, [Wednesday,October 12 2022]
பிரபல நடிகை ஒருவர் தான் அணிந்திருந்த ஒவ்வொரு ஆடையாக கழற்றி எறிந்து நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை என்றும் உடை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றேன் என்றும் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் இருந்ததாக இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ஹிஜாபுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் நடிகை எல்னாஸ் நோரூசி என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் முதலில் ஹிஜாப் அணிந்து காணப்படும் நிலையில் அதன்பின்னர் ஒவ்வொரு ஆடையாக கழற்றி அரை நிர்வாண கோலத்தில் இருக்கிறார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு பெண்ணும், உலகில் எங்கிருந்தாலும் அவள் விரும்பிய உடையை அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும் அல்லது வேறு எந்தப் பெண்ணுக்கும் அவளை வேறுவிதமாக ஆடை அணிய சொல்ல உரிமை இல்லை.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன, அவை மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம்... ஒவ்வொரு பெண்ணும் தன் உடையை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்! நான் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, உடை சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன்! என்று பதிவு செய்துள்ளார்.