'இறைவன்' படத்தில் திடீர் மாற்றம் செய்த படக்குழு.. திருப்பம் ஏற்படுமா?

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

ஜெயம் ரவி நடிப்பில் ‘என்றென்றும் காதல்’, ‘மனிதன்’ படங்களின் இயக்குனர் அகமது இயக்கத்தில் உருவான 'இறைவன்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது படக்குழுவினர் திடீர் மாற்றம் செய்துள்ளனர். நேற்று மாலை முதல் இந்த படம் 14 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டு திரையிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திருப்தி அடையாத நிலையில் 14 நிமிட காட்சிகள் ட்ரீம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு 'இறைவன்’ திரைப்படத்தின் வசூலில் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்தை ‘எங்கேயும் எப்போதும்’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார்

More News

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா முன்னாள் மிஸ் இந்திய அழகி? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தளபதி 68'. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற

கமல்ஹாசன் மகளின் ஹாலிவுட் படம்.. ரிலீசுக்கு முன்பே விருதுகளை குவிக்கின்றதா?

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பதும் ஆறு

'லால் சலாம்' ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா.. 2 பிரபலங்களின் படங்களுக்கு சிக்கலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' என்ற படத்தின் ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில்

மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம்

இந்தியாவின் முன்னணி பிரம்மாண்டமான படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ்  பட தயாரிப்பில் ஈடுபட தொடங்கி வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது