யுவனின் மயக்கும் மெலடி.. 'இறைவன்' படத்தின் ஜெயம் ரவி - நயன்தாராவின் பாடல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், அகமது இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘இறைவன்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் யுவன் சங்கர் ராஜா, அர்மான் மாலிக் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வம் இந்த பாடலை பாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை கேட்கும் போது இந்த பாடல் அசத்தலாக உள்ளது என்றும் மனதை உருக வைக்கும் அளவுக்கு மெலடியாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த பாடல் நிச்சயம் ஹிட் ஆகும் என்றும், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘இறைவன்’ படத்தின் பாடலின் முதல் சில வரிகள் இதோ:

புடிச்ச ஒருத்தன் தான் உடைக்கிறான்
துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே
ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான்
சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே
கண்ண முழிச்சா உன்னை நினைச்சா
இந்த நெஞ்சம் வந்து என்னை சுடுதே
என்ன தெரிஞ்சா உள்ளம் புரிஞ்சா
உள்ள ரணமும் புரியுமே
உன்ன விலக்கி என்ன அளந்தா
ஒரு இடையின்றி உயிர் விழுமே
உன்ன விடவே இல்லை மனசே
கண்ட கனவில் காயமே