இப்படி ஒரு மாஸ்க் அணிவதும், 12345 பாஸ்வேர்டு வைப்பதும் ஒன்றுதான்: ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்
- IndiaGlitz, [Tuesday,July 21 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறையினர் வரை பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்தாலும் சில மாதங்கள் மாஸ்க் அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் அவசியத்திற்கு அணியும் மாஸ்க்கை சிலர் ஆடம்பரத்துக்காக அணிகின்றனர் என்பதும் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட மாஸ்குகளை அணிந்து கொரோனா வைரஸின் சீரியஸ் தெரியாமல் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் சில பேர்கள் மாஸ்க் என்ற வகையில் கர்சீப்பை கட்டிக்கொண்டும், வலை போன்ற துணியை கட்டிக்கொண்டு துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு செல்வது அறியாமையின் உச்சகட்டமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். ஒரு பெண் வலை போன்ற ஒரு மாஸ்க் அணிந்து உள்ளது குறித்து அவர் கூறியபோது இப்படிப்பட்ட ஒரு மாஸ்க் அணிவதும் 12345 என பாஸ்வேர்டு வைப்பதும் ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ஆன்லைனில் அட்மின் மற்றும் 12345 என யூசர்நேம், பாஸ்வேர்டு வைப்பதை வழக்கமாகக சிலர் கொண்டுள்ளனர் என்பதும் ஹாக்கிங் செய்பவருக்கு இது மிக எளிதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கொரோனா வைரஸ் மிக எளிதாக பாதிக்கும் வகையில் வலை போன்ற மாஸ்குகளை அணிந்து கொரோனா வைரஸ் என்ற ஆபத்தை பெறுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.