விரல்களை காட்டி செல்பி எடுத்தால் என்ன ஆகும்? ரூபா ஐபிஎஸ் எச்சரிக்கை
- IndiaGlitz, [Wednesday,July 04 2018]
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்புக்கு ஆளானவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இந்த நிலையில் ரூபா ஐபிஎஸ் அவர்கள் தற்போது செல்பி குறித்து ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
செல்பி எடுக்கும்போது பலர் கைவிரல்களை மேலே தூக்கி போஸ் கொடுப்பது வழக்கம். அவ்வாறு விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து ரூபா ஐபிஎஸ் அவர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கைவிரல்கள் தெரியும்படியான செல்பி மற்றும் செல்பி அல்லாத புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது, அவற்றில் உள்ள விரல் ரேகைகளை ஜூம் செய்து நகலெடுக்க முடியும் என்றும், அந்த விரல் ரேகைகளை குற்றம் நடக்கும் இடம் உள்பட பல்வேறு தவறு நடக்கும் இடங்களில் பயன்படுத்த முடியும் என்றும் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு ஆளாக நேரிட வாய்ப்புள்ளது என்றும் ரூபா ஐபிஎஸ் கூறி உள்ளார்.
இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி கைவிரல்கள் தெரியும் வகையில் செல்பி மற்றும் சாதாரண புகைப்படங்களை தவிர்ப்பது நல்லது