கமல்ஹாசனை சந்தித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதாவின் தோழி சசிகலா கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபாவை யாரும் மறந்திருக்க முடியாது.. சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வந்ததை கண்டுபிடித்து, அவருக்கு சிக்கலை ஏற்படுத்திய இவர் தமிழக அரசியலில் மட்டுமின்றி கர்நாடகாவிலும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தினார்
இந்த நிலையில் சசிகலா விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ரூபா, சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, அதே நிகழ்ச்சியில் ரூபா ஐபிஎஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது திறமையான நடிகர்-இயக்குனர் கமல்ஹாசனை சந்தித்ததாகவும், அந்த தருணம் தனது மகிழ்ச்சிக்குரியது என்றும், இந்த விஷயத்தை தனது தமிழக நண்பர்களுக்கு தெரியப்படுத்தி கொள்வதாகவும் ரூபா ஐபிஎஸ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments