சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த இளைஞர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்காக ஒரு பக்கம் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி போலீசிடம் அடிவாங்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் முன் விடிய விடிய இளைஞர்கள் பலர் வரிசை நின்றுள்ளனர்.
மார்ச் 23ஆம் தேதி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது
இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுக்களை வாங்க நேற்றிர்வு முதலே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ரூ.1300 முதல் ரூ.6500 வரையிலான டிக்கெட்டுக்கள் விற்பனையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை போட்டியில் கலந்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மனைவி, மற்றும் மகளுடன் சென்னைக்கு வந்துள்ளார். மற்ற சிஎஸ்கே வீர்ர்களும் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் விரைவில் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout