முதலிடத்தை நோக்கி பெங்களூரு, முதல் வெற்றியைத் தேடி சென்னை
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் புதிய கேப்டனுக்கும் பழைய வீரருக்கும் பலப்பரீட்சை
இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 22ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
சென்னை, பெங்களூரு இதுவரை….
விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த பொட்டியிலாவது ஜெயிக்குமா என்று சென்னை அணியின் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் ஒரு ஏக்கமுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் 2 புள்ளிகள் பெற்று, புள்ளி அட்டவணையில் முன்னே செல்ல முடியும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வென்றால் 8 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் மேல்நோக்கி சென்றுவிடும்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள கடைசி 5 ஆட்டங்களில் சென்னை அணி 3 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து பெங்களூரு அணிக்கு எதிராக 8 முறையும், இரண்டாவதாக விளையாடி 10 முறையும் வென்றுள்ளது. பெங்களூரு அணி சென்னைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 5 முறையும், இரண்டாவதாக விளையாடி 4 முறையும் வென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பலம், பலவீனம்
சென்னை அணியின் தோல்விகளுக்கு நமது வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடாததே காரணம். ஒரு ஆட்டத்தில் உத்தப்பா நன்றாக விளையாடினாள், அடுத்த போட்டியில் விரைவாக பெவிலியன் திரும்புகிறார். அவர் ஒரு நிலையான பார்முக்கு வந்துவிட்டால், சென்னைக்கு ஆட்டம் தொடக்கத்தில் ஒரு நல்ல பலமாக அமையும். அந்த பக்கம் ருத்துராஜ் கைக்வாட் இன்னும் தனது முழு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தொடர்ந்து 4 ஆட்டங்களிலும் மிக சொற்ப ரன்களில் வெளியேறினார். இந்த போட்டியிலாவது அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், இல்லையெனில் சென்னை அணியின் தொடக்க ஆட்டத்திற்கு மாற்று திட்டத்தைத்தான் கொண்டுவரவேண்டும்.
வந்த 3 ஆட்டங்களில் மொயீன் அலி நன்றாக செட் ஆகிவிட்டார். போன ஆட்டத்தில் அவரின் ஆட்டம்தான் அணி மிக மோசமான நிலைக்கு செல்லாமல் காப்பாற்றியது. இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டாப் ஆர்டர் வலுவாகிவிடும். சிவம் துபே சென்னைக்கு எதிர்பார்த்ததைவிட நன்றாகவே விளையாடி வருகிறார். அவரும் தனது பார்மை தக்க வைத்துக் கொள்வது மிக அவசியம். ராயுடு, தோனி, பிராவோ தங்களின் பங்கை சிறப்பாக செய்தாலே எதிரணிக்கு ஆட்டம் கண்டுவிடும். இந்த போட்டியில் எல்ல வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒன்றாக வெளிப்படுத்த வேண்டும். ஐபிஎல் தொடரின் ஒரு முக்கிய அணியாக இருந்து கொண்டு இன்னொரு ஆட்டத்தை தோற்றால், பின்பு புள்ளி அட்டவணையில் மேலே வருவது மிக கடினமாகிவிடும்.
சென்னையின் பௌலிங் இன்னும் சற்று பலவீனமாகத்தான் உள்ளது. தீபக் சாஹர் இல்லாதது பெரிய இழப்புதான் என்றாலும், மீதி இருக்கும் வீரர்களை வைத்தும் நன்றாக பந்து வீச முடியும். அணியில் இருக்கும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்த்தால் ஒரு நல்ல பௌலிங் தொடக்கம் அமையும். ஏனெனில் பெங்களூரு அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணி. போதாதென்று பெங்களூரு அணிக்கு நமது செல்லப்பிள்ளை பாப் டு பிளெஸ்ஸி தான் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலம், பலவீனம்
பெங்களூரு அணிக்கு பௌலிங் பேட்டிங் என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஒரு அணி. பேட்டிங்கில் பாப் டு பிளெஸ்ஸியும், அனுஜ் ராவத்தும் சிறந்த துவக்கத்தை அளிக்கிறார்கள். போன ஆட்டத்தில் அனுஜ் 47 பந்துகளை 66 ரன்கள் விளாசினார், இந்த ஆட்டத்திலும் அதே பார்முடன் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி, மக்ஸ்வெல் என்று ஒரு பட்டாளமே இருந்தாலும், நம்ம ஊர்காரனுக்கு நம்மதான் எதிரி என்பது போல தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் தான் சென்னைக்கு இடையூறாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஹர்ஷல் படேல் தந்து குடும்ப அவசர நிலையால் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது, ஆகையால் சித்தார்த் கவுல் அவருக்கு பதிலாக விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மற்ற பௌலர்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமுள்ளது.
தோனியும் கோலியும் கேப்டன்களாக இல்லாமல் வீரர்களாக களத்தில் சந்திக்கப்போவது இதுவே முதல்முறையாகும்.
நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (C), சிவம் துபே, எம்எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, மகிஷ் தீக்ஷனா, கிறிஸ் ஜோர்டன், முகேஷ் சௌத்ரி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பாப் டு பிளெஸ்ஸி (C), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், தினேஷ் கார்த்திக் (WK), சித்தார்த் கவுல், வனிந்து ஹசரங்க, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments