தனது முதல் வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் பிபிகேஎஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 3ஆம் தேதி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 7 வது இடத்திலும், சென்னை 8 வது இடத்திலும் உள்ளன.
பிரபோர்ன் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு ஏற்ற களம். குறுகிய பௌண்டரி எல்லைகள் ஒரு மாபெரும் ஸ்கோர் எட்டுவதை எளிதாக்குகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்ற இந்த களம், இன்னிங்ஸின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பலம், பலவீனம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் இரண்டு தொடக்க ஆட்டங்களில் இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது. சூப்பர் கிங்ஸ் கேப்டன்சியில் மாற்றம் கை கொடுக்கவில்லை என்ற கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்திய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 210 ரன்கள் எடுத்தது ஆனாலும் அவர்கள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
ராபின் உத்தப்பா கடைசி ஆட்டத்தில் பேட்டிங்கைத் தொடங்கி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனால் இந்த போட்டியிலாவது ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் எடுக்க வேண்டும். மிடில் ஆர்டரில் மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு ஆகியோர் ரன்களை குவித்ததால் கடைசி ஆட்டத்தில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டது. ஜடேஜா, எம்.எஸ். தோனி மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் நல்ல பினிஷர்கள் என்பதால் பேட்டிங் லைன் அப் குறித்து கவலை கிடையாது.
பவுலிங்கில் சென்னை அணி நிறைய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆடம் மில்னே புதிய பந்தில் தனது திறமையை இன்னும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. துஷார் தேஷ்பாண்டே தனது ஆட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்தி ஆட வேண்டும். இந்த ஆட்டத்தில் மொயின் அலி கட்டாயம் பந்துவீச வேண்டும், ஏனெனில் அவர் ஜடேஜாவுடன் இணைந்து நடுத்தர ஓவர்களில் பந்துவீச்சை வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவைன் பிராவோ மற்றும் பிரிட்டோரியஸ் இருவருமே தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், அவர்களுக்கு மற்றவர்களும் கைகொடுத்தால், சென்னை அணியின் பௌலிங்கும் சிறப்பாக வெளிப்படும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம்
பஞ்சாப் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பட்டம் வெல்லவில்லை, கடந்த சில சீசன்களில் மோசமாக தோல்வியடைந்துள்ளது. 2014 இல், பிபிகேஎஸ் இறுதிப் போட்டியை எட்டியது, அதன் பிறகு அவர்கள் ஒரு முறை கூட பிளே ஆஃப் களுக்கு தகுதி பெறவில்லை மற்றும் இரண்டு முறை புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் உறுதியாக வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு பேட்டிங் ஒரு பிரச்சனை இல்லை என்றாலும், அவர்களின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. பந்து வீச்சாளர்கள் சரியான நேரத்தில் பவுண்டரிகளை விட்டு விடுகிறார்கள் மற்றும் டெத் ஓவர்களில் அவர்கள் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்துகிறார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அணி பேட்டிங்கில் சரிவை சந்தித்து 137 ரன்களுக்கு சுருண்டது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அகர்வால் மற்றும் ஷிகர் தவான் வலுவான தொடக்க ஜோடியை உருவாக்குகிறார்கள், மேலும் இந்த ஆட்டத்தில் அவர்களிடமிருந்து அணி ஒரு நல்ல தொடக்கத்தை எதிர்பார்க்கிறது. அந்த அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் அவர்களின் பந்து வீச்சு பலனளிக்கவில்லை. கடந்த ஆட்டத்தில் ராகுல் சாஹர் அற்புதமாக இருந்தார், இது அவரது நம்பிக்கையை அதிகரிக்கும்.
நாளைய போட்டியில் பஞ்சாப் அணியில் ஓடியன் ஸ்மிதுக்கு பதிலாக பென்னி ஹோவெல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கு பேட்டிங்கில் பலம் என்பதால் பஞ்சாப் அணி பவுலிங்கில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கும்.
சென்னை vs பஞ்சாப் இதுவரை…
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 25 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 25 ஆட்டங்களில் சென்னை அணி 15ல் வெற்றி பெற்றுள்ளது, பஞ்சாப் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக துபாயில் நடந்த ஐபிஎல் சீசனின் 53 வது போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிபிகேஎஸ் அணி 13 ஓவர்களில் இலக்கைத் துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ராபின் உத்தப்பா, 3. மொயீன் அலி, 4. அம்பதி ராயுடு, 5. சிவம் துபே, 6. எம் எஸ் தோனி (WK), 7. ரவீந்திர ஜடேஜா, 8. டுவைன் பிரிட்டோரியஸ், 9. டுவைன் பிராவோ, 10. சௌத்ரி, 11. துஷார் தேஷ்பாண்டே.
பஞ்சாப் கிங்ஸ்:
1. மயங்க் அகர்வால், 2. ஷிகர் தவான், 3. பானுகா ராஜபக்சே, 4. லியாம் லிவிங்ஸ்டோன், 5. ராஜ் பாவா, 6. ஷாருக் கான், 7. ஹர்பிரீத் ப்ரார் 8. ஒடியன் ஸ்மித், 9. ககிசோ ரபாடா, 10. ராகுல் சத்தீப் சிங் 11 .ராகுல் சஹார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments