மொயீன் அலி கம் பேக்: அதிரடி காட்ட சிஎஸ்கே தயார்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 2022 சீசனின் 7வது போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும், மார்ச் 31ம் தேதியும் பிரபோர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு ஏற்றது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 157 ஆகும். இரண்டு அணிகளுமே தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் எப்படியாவது வென்று முன்னிலை பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும், ஆகையால் அதிரடிக்கு பஞ்சமே இருக்காது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலவீனம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இன்னும் அணியை சேராததால் பின்னடைவை சந்திக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய வெளிநாட்டு ஜோடிகளான மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் இன்னும் களமிறங்கவில்லை. ஸ்டோனிஸ் தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார், அதே நேரத்தில் ஹோல்டர் இன்னும் ஐபிஎல் பயோ-பபுளில் சேரவில்லை. மறுபுறம், காயம் அடைந்த மார்க் வுட்டுக்கு பதிலாக ஆண்ட்ரூ டை களமிறங்குவது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மீண்டும் மூன்று வெளிநாட்டு வீரர்களான எவின் லூயிஸ், துஷ்மந்த சமீரா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோரை நாளை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விளையாடும் 11 இல் களமிறக்குகிறது. குஜராத்துக்கு எதிராக படோனியின் ஆட்டம் லக்னோ அணிக்கு பக்கபலமாக அமைந்தது. அவருடைய நிதானமான ஆட்டத்தை சென்னைக்கு எதிராகவும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல கோல்டன் டக் அவுட்டான கேப்டன் கே எல் ராகுலும் தனது பார்முக்கு திரும்பி அணியின் டாப் ஆர்டரை மேம்படுத்துவதில் அதிகம் கவனம் இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் போன ஆட்டத்தில் மிக மோசமாக இருந்த நிலையில், தல எம்.எஸ்.தோனி 50 ரன்கள் அடித்து ஆறுதல் தந்தார், அவருடன் சேர்ந்து ஜடேஜா தந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனால் இதற்கு மேலும் நிதானம் இங்கு எடுபடாது. 20 ஓவர் போட்டி என்பதால் அதிரடி ஆட்டம் மிக அவசியம், ஜடேஜா அதை சிறப்பாக செய்ய கூடியவர், ஆகையால் இந்த ஆட்டத்தில் ஜடேஜாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விசா பிரச்சனைகளால் முதல் ஆட்டத்தில் விளையாடாத மொயீன் அலி இரண்டாவது ஆட்டத்தில் அணியில் இணைவது சென்னைக்கு மிக பெரிய பலமாக அமையும். அணியின் நான்காவது ஐபிஎல் கோப்பை வெற்றிக்கு மொயீன் அலியின் பங்களிப்பு ஏராளம். ஏலத்திற்கு முன் சூப்பர் கிங்ஸால் தக்கவைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். 25.50 சராசரி மற்றும் 137.30 ஸ்ட்ரைக் ரேட், 15 இன்னிங்ஸ்களில் 357 ரன்கள் மற்றும் 137.30 சதவீதம் ஸ்ட்ரைக் ரேட் மூலம் 2021ல் சூப்பர் கிங்ஸின் ஆல்-டைம் ஸ்கோரிங் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
மொயீன் அலிக்கு பதில் மிட்செல் சான்ட்னர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பௌலிங் பொறுத்தவரை தீபக் சாஹர் எந்த ஆட்டத்தில் களமிறங்க முடியும் என்று தெரியாத பட்சத்தில், தற்போது இருக்கும் வீரர்களே தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் மீண்டும் அதே அணியுடன் இறங்க வாய்ப்புள்ளது. ஆயுஷ் படோனி ஒரு அருமையான ஐபிஎல் அறிமுகத்திற்கு பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மொத்தத்தில், சிஎஸ்கே எல்எஸ்ஜிக்கு எதிராக பேட் மற்றும் பந்தில் கூட்டாக சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிதாக கேப்டன் பதவியேற்ற ஜடேஜா தனது கேப்டன் திறமையை நிரூபிக்க முனைப்பாக இருப்பார்.
இரு அணிகளின் தற்போதைய நிலைமை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் 1 போட்டியில் விளையாடி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடரில் 1 போட்டியில் விளையாடி புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. பொதுவாக தொடரின் தொடக்கத்தில் மேலே செல்லும் அணிகளுக்கு தங்கள் இடத்தை தக்க வைத்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால் நாளை இரு அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவும்.
நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
1. ருதுராஜ் கெய்க்வாட், 2. டெவன் கான்வே, 3. ராபின் உத்தப்பா, 4. மொயீன் அலி, 5. அம்பதி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா (c), 7. எம்.எஸ் தோனி (wk), 8. ஷிவம் துபே, 9. டுவைன் பிராவோ, 10. ஆடம் மில்னே, 11. துஷார் தேஷ்பாண்டே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
1. கே.எல். ராகுல் (c), 2. குயின்டன் டி காக் (wk),3. மணீஷ் பாண்டே, 4. எவின் லூயிஸ், 5. க்ருனால் பாண்டியா, 6. தீபக் ஹூடா, 7. ஆயுஷ் படோனி, 8. அவேஷ் கான், 9. மொஹ்சின் கான், 10. ரவி பிஷ்னோய், 11. துஷ்மந்த சமீரா
இளவரசன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments