தனது வெற்றிப் பயணத்தை தொடர களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தீபக் சாஹர் தொடரிலிருந்து முழுமையாக விலகியதை எப்படி சமாளிக்க போகிறது சென்னை அணி?
நாளை நடக்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2022 தொடரின் 29ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
கடந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி ஒரு நல்ல பார்மில் களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து சென்னை ரசிகர்கள் மனதிலும் உண்டு. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முதல் வெற்றியைச் சுவைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அதை வெற்றிகரமாக தொடர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கும். விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல பார்மில் இருப்பதால் நாளை அதிரடிக்கு பஞ்சமிருக்காது.
இரண்டு அணிகளுமே இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ளன, ஒரே வித்தியாசம் என்னவென்றால், குஜராத் அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது, சென்னை அணி ஒரு போட்டியில் மட்டும் தான் வென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை அணி எந்த மாற்றமும் இல்லாமல் தான் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணிக்கு எதிராக அம்பதி ராயுடுவும், சிவம் டுபேவும் காட்டிய அதிரடி சென்னை அணியின் மிடில் ஆர்டர் பலமாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது. அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்த பிறகு உத்தப்பா ,ஷிவம் துபே இருவரும் ,பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். உத்தப்பா 50 பந்துகளில், 4 பவுண்டரிகள் , 9 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்களும் ,ஷிவம் துபே 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 95 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 72 பந்துகளில் 165 ரன்கள் குவித்தது.
சென்னை அணி பவுலிங்கில் அதிக ரன்கள் கொடுத்தாலும் சரியான விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பெங்களூரு அணியை வீழ்த்தியது. தீபக் சாஹரும் முதுகில் அடிபட்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகி கொள்வதாக அறிவித்தது சென்னை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் சஹாரை எதிர்பார்க்க முடியாது என்பதால் மற்ற பவுலர்கள் மீது கவனம் செலுத்தி ஒரு நல்ல பவுலிங் அட்டாக்கை உருவாக்க வேண்டும். பெங்களூருவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய தீக்க்ஷனா இந்த தொடர் முழுவதும் அணிக்கு ஒரு நம்பிக்கையான பவுலராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்த ஆட்டம் சென்னையின் 200ஆவது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் அணி தனது முந்தைய போட்டியில் ராஜன் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங் தொடக்கத்தில் தடுமாறினாலும், ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி அபினவ் மனோகர் 43 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். குஜராத் அணி பேட்டிங்கில் பலமாக உள்ளதால் சென்னை அணி தனது பவுலர்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
குஜராத் அணியின் பவுலிங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணி. விளையாடிய எல்லா போட்டிகளிலும் 6 முதல் 7 பவுலர்களை களமிறக்கியுள்ளது. குஜராத் அணி பவுலிங்கில் ரஷீத் கான், பெர்குசன், முஹம்மத் சமி, ஹர்திக் பாண்டியா என்று ஒரு பட்டாளமே உள்ளது ஆகையால் தங்களது விக்கெட்டுகளை விடாமல் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடும் முதல் போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை தனது வெற்றி பயணத்தை தொடர வேண்டும். இந்த வருடம் 2 புதிய அணிகள் களமிறங்கியுள்ளதால் புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடும் போட்டி நிலவும். இரு புது கேப்டன்கள் மோதிக்கொள்வதால் போட்டியில் சுவாரசியம், அதிரடி அதிகம் இருக்கும். நாளை மதியம் பஞ்சாப் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்று, இரவு போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்தால், புள்ளி பட்டியலில் குஜராத் அணி தனது முதல் இடத்தை இழந்துவிடும்.
இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணிதான் ஆனால் குஜராத் அணியின் பவுலிங்கை ஒப்பிடுகையில் சென்னை அணியின் பவுலிங் சற்று பலவீனம் தான். கேப்டனாக தனது முதல் வெற்றியை தன் மனைவிக்கு சமர்ப்பித்த ஜடேஜா நாளை சென்னை அணியை எப்படி வழி நடத்திச் செல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (C), சிவம் துபே, எம் எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, மகிஷ் தீக்க்ஷனா, கிறிஸ் ஜோர்டன், முகேஷ் சௌத்ரி.
குஜராத் டைட்டன்ஸ்: மேத்யூ வேட் (WK), ஷுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (C), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்
- இளவரசன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments