ஐபிஎல் 2022: எந்தெந்த அணிகள் யார் யாரை தக்க வைத்தனர்? எத்தனை கோடி?
Send us your feedback to audioarticles@vaarta.com
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து அனைத்து அணிகளுக்கும் வீரர்களின் ஏலம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள நேற்றுடன் கெடு முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு உரிய ஏலத் தொகை எத்தனை கோடி என்பது குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. அந்த தகவல் குறித்த முழு விவரங்கள் இதோ:
சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி- ரூ.12 கோடி, ஜடேஜா ரூ.16 கோடி, மொயின் அலி ரூ.8 கோடி, ருத்ராஜ் ரூ.6 கோடி.
டெல்லி அணி: ரிஷப் பண்ட்: ரூ.16 கோடி, அக்சர் பட்டேல் ரூ.9 கோடி பிரித்வி ஷா ரூ.7.50 கோடி, அன்ரிச் நார்ட்ஜே ரூ.6.50 கோடி.
கொல்கத்தா அணி: ரஸல் ரூ.12 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.8 கோடி, வெங்கடேஷ அய்யர் ரூ.8 கோடி, சுனில் நரேன் ரூ.6 கோடி.
மும்பை அணி: ரோஹித் சர்மா ரூ.16 கோடி, பும்ரா ரூ.12 கோடி, சூர்ய குமார் யாதவ் ரூ.8 கோடி, பொல்லார்ட் ரூ.6 கோடி ஆகிய நால்வரை தக்க வைத்துள்ளது;
பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால் ரூ.12 கோடி, அர்ஷிதீப் சிங்: ரூ.4 கோடி
ராஜஸ்தான் அணி: சஞ்சு சாம்சன் ரூ.14 கோடி, பட்லர் ரூ.10 கோடி, ஜெய்ஸ்வால் ரு.4 கோடி.
பெங்களூரு அணி: விராட் கோலி ரூ.15 கோடி, மேக்ஸ்வெல் ரூ.11 கோடி, முகமது சிராஜ் ரூ.7 கோடி ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது
ஐதராபாத் அணி: கேன் வில்லியம்ஸ் ரூ.14 கோடி, அப்துல் சமது ரூ.4 கோடி, உம்ரன் மாலிக் ரூ.4 கோடி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments