டி20-யில் இரட்டை வரலாற்றுச் சாதனை படைத்த பொல்லார்ட்டு… ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் 42 ஆவது லீக் ஆட்டம் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. எளிதாக வெற்றிப்பெற வேண்டிய இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றிக்கு இடையே அந்த அணியில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கெய்ரன் பொல்லார்ட் இரட்டை சாதனை படைத்து, “கிரிக்கெட் சாதனை வரலாற்றுப் புத்தகத்தில்“ இடம்பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் கிரிக்கெட் களம் வேகப்பந்துக்கு சாதகமாக அமையாமல் வெறுமனே குறைவான வேகப்பந்துகளுக்கு மட்டுமே சாதகமாக அமைந்தது. இதனால் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 135 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றிப்பெற்று விடுவார்கள் என நினைத்தபோது 19 ஓவர்களை கடந்து 137 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிப்பெற்றனர்.
இந்தப் போட்டியின்போது 8 ஓவர்களைக் கடந்த நிலையில் பஞ்சாப் வீரர்களுக்கு பந்து வீச மும்பை வீரர் கெய்ரன் பொல்லார்டுக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பு டி20 கிரிக்கெட் போட்டியில் 298 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த இவர் வெறும் 6 பந்துகளை வீசி 8 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் டி20 போட்டியில் 300 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
கெய்ரன் பொல்லார்ட் இதுவரை 175 டி20 போட்டிகளை விளையாடிய நிலையில் ஏற்கனவே அதில் 10,000 ரன்களையும் குவித்துள்ளார். தற்போது 300 விக்கெட்டுகளை குவித்துள்ளார். அதுவும் டி20 போட்டிகளில் வரலாற்று நாயகன் எனப் பாராட்டப்படும் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் கெயில் மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் போன்றோர் எடுத்த விக்கெட்டுகளை விட அதிக விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
இதையடுத்து ஆட்டநயாகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்ரன் பொல்லார்ட் கிரிக்கெட் சாதனை வரலாற்றுப் புத்தகத்திலும் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 10,000 ரன்களைத் தாண்டி சாதனைப் படைத்தார். இதனால் உலக அளவில் இந்தச் சாதனையைப் படைத்த 5 ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆனால் கெய்ரனை போன்று இதுவரை 10,000 ரன்களை எடுத்து 300 விக்கெட்டுகளை யாரும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com