மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அஸ்வின்… ஏலத்தில் சரிந்த சோகம்!

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை பல அணிகள் போட்டி போட்டி ஏலத்தில் எடுக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி வெறுமனே 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக வாய்ப்புக் கிடைக்காமல் தவித்துவந்த அஸ்வின் டி20 உலகக்கோப்பை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போட்டிகளில் கலந்துகொண்டு மீண்டும் தனது திறமையை நிரூபித்தார். மேலும் 167 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 145 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

இதனால் அனுபவம் வாய்ந்த அஸ்வினை பல அணிகள் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. புதிய அணிகள் இவர் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் மார்க்யூ வரிசையில் முதலில் இடம்பெற்ற அஸ்வினை சென்னை சிஎஸ்கே முதற்கொண்டு முன்னணி ஐபிஎல் அணிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இது கடும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

இதையடுத்து ஆரம்பவிலையாக ரூ.2 கோடி வைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் அணி நிர்வாகம் பெரும் போட்டியே இல்லாமல் 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.