கொரோனா வைரஸ் எதிரொலி: ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சீனா உள்பட உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் ஒருசில மாநிலங்களிலும் பரவி இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் மைதானத்தில் நடத்தலாம் என்றும், போட்டியை தொலைக்காட்சி மற்றும் செயலிகள் மூலம் ஒளிபரப்பு செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த ஆலோசனையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து அரைஇறுதிப்போட்டியில் 60,000 பேர் இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லை என்றும் ஐபிஎல் போட்டியையும் ஆடியன்ஸ்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிசிசிஐ என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments