ஐபிஎல் திருவிழா : ஸ்பெஷல் டிரைலர் நினைவாகுமா கிங் கோலியின் கனவு?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் அதிக நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ள அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதுவரையிலான பெங்களூரு அணியின் பயணம் குறித்து பார்க்கலாம். இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொடூரமான கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 19இல் ஐபில் தொடர் துவங்கவுள்ளது. இதில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இம்முறையாவது கோப்பையைத் தன்வசப்படுத்தும் என அந்த அணி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நட்சத்திரப் பட்டாளம்
பெங்களூரு அணியைப் பொருத்தவரையில் கோலி, ஏபி டிவிலியர்ஸ் என சர்வதேச அனுபவம் கொண்ட நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. 12 ஆண்டுகள் கோப்பை வெல்லாதபோதும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் கூட்டம் அந்த அணியின் மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. 2008இல் பெங்களூரு அணியை ரூ. 111.6 மில்லியன் டால்ர் மதிப்பில் விஜய் மல்லையா உருவாக்கினார். அப்போது பெங்களூரு அணிதான் இரண்டாவது மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அணியாக இருந்தது. பெங்களூரு அணி எப்போதுமே மிகப் பெரிய நட்சத்திரங்கள் அடங்கியதாகவே திகழ்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் வெவ்வேறு லெவன் அணியைக் களமிறங்கியது. பிரபலமான வீரர்கள் இடம் பெற்றிருந்தபோதும் அந்த அணியின் மோசமான ராசி பல ஆண்டுகளாக தொடர்கதையாகவே உள்ளது.
சாதனை வரலாறு
ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணிகளில் முதலிரண்டு இடங்களில் பெங்களூரு அணி உள்ளது. 2013இல் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 263 ரன்கள் குவித்தது. அதேபோல 2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 248 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணியும் இதே பெங்களூரு அணிதான். 2017இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெறும் 49 ரன்களுக்குச் சுருண்டது.
கோலி - டிவிலியர்ஸ் கூட்டணி
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு அணியின் அசைக்க முடியாத தூணாக உள்ளது டிவிலியர்ஸ் - கோலி கூட்டணிதான். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பாட்னர்ஷிப் சாதனைகள் கோலி - டிவிலியர்ஸ் கூட்டணி வசம் உள்ளது. 2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 229 ரன்களும், 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 215 ரன்களும் இந்த ஜோடி சேர்த்துள்ளது.
கைக்கு எட்டியது...
பெங்களூரு அணிக்காக சுமார் 12 ஆண்டுகளாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். இதன் மூலம் ஒரே அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இரண்டாவது இடம் பிடித்தது. அதேபோல 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் டாப் 4 அணிகளில் இடம் பிடித்தது. பெங்களூரு அணி பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோப்பை அதன் கைக்குச் சிக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறது. இம்முறை இந்த அணி ஐபிஎல் கோப்பை வென்றால் அணியின் புகழுக்கும் அதன் நட்சத்திரங்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
ஆர்சிபி கலந்துகொள்ளும் போட்டிகள்:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments