ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான சாதனைகளைக் கொண்ட அணி டெல்லி கேபிடல்ஸ் அணியாகும். இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியின் பயணம் குறித்து பார்க்கலாம். முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் பெயருடன் அதிரடி பேட்ஸ்மேன்களான விரேந்திர சேவாக், ஏபி டிவிலியர்ஸ், கவுதம் காம்பீர், கெவின் பீட்டர்சன் ஆகியோரைக் கொண்ட, வீழ்த்த முடியாத பலமான அணியாகக் காணப்பட்டது. ஆனால் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற அணிகளில் ஒரு முறைகூட ஃபைனலுக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி அணி மட்டும்தான். தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை மாற்றி டெல்லி கேபிடல்ஸ் அணியாகக் களம் காணுகிறது.
ஒவ்வொரு முறை ஏலம் நடத்தப்படும்போதும் திறமையான வீரர்களான டேவிட் வார்னர், கவுதம் காம்பீர், டிவிலியர்ஸ், ஆன்ட்ரே ரஸ்ஸல் எனப் பல வீரர்களை டெல்லி அணி இழந்துள்ளது. டெல்லி அணிக்காக விளையாடியபோது சொதப்பிய இவர்கள் தற்போது மற்ற அணிகளில் அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ளனர்.
மோசமான சாதனை
இவர்களைக் கழற்றிவிட்டதன் விளைவாக ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே புள்ளிப் பட்டியலில் அதிக முறை கடைசி இடம் பிடித்த அணி என மோசமான சாதனையை இந்த அணி படைத்துள்ளது. இந்த அணி 2011, 2013, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதே போல கடந்த 2013 முதல் 2018 வரையில் தொடர்ச்சியாக 6 சீசன்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறவில்லை.
இது மட்டுமில்லாமல் ஐபிஎல் அரங்கில் அதிகத் தோல்விகள் (98 தோல்விகள்), மோசமான வெற்றி சதவீதம் (43.50), அதிக தொடர் தோல்விகள் (11), ஒரே சீசனில் அதிகத் தோல்விகள் (13 தோல்விகள், 2013) என அடுக்கடுக்காகப் படுமோசமான சாதனைகளைத் தன்வசம் கொண்டுள்ள ஒரே அணி டெல்லி அணிதான். மற்ற ஐபிஎல் அணிகள் தங்களின் சொந்த மைதானத்தில் அசைக்க முடியாத அணிகளாகத் திகழ்கின்றன. ஆனால் டெல்லி அணிக்கு
பெரோஷா கோட்லா அப்படி இல்லை. அங்கும் இந்த அணி சரிவையே சந்தித்துள்ளது. இங்கு டெல்லி அணி 70 போட்டிகளில் பங்கேற்று 31 போட்டிகளில் வெற்றியும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
இளம் தலைமை
டெல்லி அணி இதுவரை சுமார் 11 கேப்டன்கள் தலைமையில் களமிறங்கியுள்ளது. ஆனால் அந்த அணியின் தலையெழுத்து மாறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ஒருவழியாக இளம் ஸ்ரேயஸ் தலைமையில் டெல்லி அணி எழுச்சி கண்டது. உரிமையாளர் மாற்றம், பெயர் மாற்றம், தலைமை மாற்றம் என இந்த மாற்றங்கள் டெல்லி அணியின் விதியை மாற்றியது. சுமார் 7ஆண்டுக்குப் பின் கடந்த ஆண்டு டெல்லி அணி முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனால் இந்த ஆண்டும் அதே வெற்றிப் பயணத்தை அந்த அணி தொடரும் என அந்த அணி ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். ரசிகர்களின் நம்பிக்கையை உண்மையாக்கவும் பழைய மோசமான சாதனைகளை மாற்றி அமைக்கவும் டெல்லி அணி வீரர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு.
நட்சத்திர வீரர்கள்
டெல்லி அணியில் பேட்டிங் வரிசையில் ஷிகர் தவன், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருடன் அஜிங்கிய ரஹானேயும் இணைந்திருப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அதேபோல, பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங்கில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ரிக்கி பான்டிங் இந்த அணியின் கோச்சாக இருப்பதும் இதன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய நட்சத்திரங்களால் புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கும் டெல்லி அணி இந்த முறை கோப்பையை நெருங்குகிறதா என்று பார்க்கலாம்.
டெல்லி அணியின் போட்டிகள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com