பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் 289 வீரர்களை 515 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஏலம் நடைபெறும் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.
காரணம் ஐபிஎல் 15 ஆவது சீசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஹக் எட்மைட்ஸ் என்பவர் திடீரென மயங்கி மேடையில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அணி நிர்வாகிகள் ஏலத்தை இடையிலேயே நிறுத்தி, ஒளிப்பரப்பையும் தடைசெய்துள்ளனர். 38 வருட அனுபவம் கொண்ட ஹக் மைட்ஸ் கடந்த 2018 இல் இருந்து ஐபிஎல் ஏலத்தை நடத்திக் கொடுத்துவருகிறார்.
மேலும் இதுவரை 2500 க்கும் மேற்பட்ட ஏலத்தை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்திருக்கும் ஹக் எட்மைஸ்க்கு என்னவாயிற்று என்பதைத் தற்போது மருத்துவக் குழு பரிசோதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்குத் துவங்கிய ஏலத்தில் இதுவரை ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணியும் ஷிகர் தவான் மற்றும் ககிஸ்கோ ரபாடாவை பஞ்சாப் அணியும் டூபிளஸிஸை பெங்களூர் அணியும் டேவிட் வார்னரை டெல்லி அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்க்யூ எனப்படும் நட்சத்திர வீரர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
IPL auction suspended.
— BAIBHAB (@Baibhabyadav07) February 12, 2022
Hopefully alright ??#IPLMegaAuction2022 #IPL2022Auction pic.twitter.com/yV87UmtwWr