செப்டம்பர் 19 முதல் களமிறங்குகிறார் 'தல': அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
செப்டம்பர் 19 முதல் அதிகாரபூர்வமாக ’தல’ களம் இறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதமே நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன.
அதன் பின் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதனை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக 3 மைதானங்கள் தயார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்தார். மேலும் நவம்பர் 8ஆம் தேதி இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் சூழல் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டியை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி நீண்ட நாட்களுக்கு பின்னர் களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி போட்டிக்கு பின் தல தோனி இன்னும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments