ஐபிஎல் வீர்ர்கள் ஏலம்: ரூ.5 கோடிக்கு பிரபல வீரரை ஏலம் எடுத்த சிஎஸ்கே
- IndiaGlitz, [Tuesday,December 18 2018]
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் போன வீரர்கள் குறித்த தகவலை பார்ப்போம்
தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் ஹனுமா விஹாரியை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையரை ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கார்லஸ் பிராத்வைட்டை கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இலங்கை பந்துவீச்சாளர் மலிங்காவை மும்பை அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது
மோஹித் ஷர்மாவை சென்னை அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
முகம்மது ஷமியை பஞ்சாப் அணி ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யுவராஜ்சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் மனோஜ் திவாரி, புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில வீரர்கள் ஏலம் போன விபரங்கள்
வருண் அரோன்: ராஜஸ்தான் அணி - ரூ.50 லட்சச்ம்
அக்சர் பட்டேல்: டெல்லி அணி - ரூ.1 கோடி
சஹா: ஐதராபாத் - ரூ.1 கோடி
உனாகட்: ராஜஸ்தான் - ரூ.1.5 கோடி