'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியை அணியின் நிர்வாகம் அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது. அதுமட்டுமின்றி புனே அணி உரிமையாளரின் சகோதரரான ஹர்ஸ் கோயன்கே ஸ்மித்தை புகழ்ந்து தோனியை அவமதித்தும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தோனியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்து வரும் நிலையில் ஹர்ஸ் கோயன்கேவுக்கு தோனியின் மனைவி சாக்சி மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது, எறும்புகளை சாப்பிடும். ஆனால் அதே பறவை இறந்த பின் எறும்புகள் அதை சாப்பிடும். நேரமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும் மாறும். அதனால் வாழ்க்கையில் யாரையும் காயப்படுத்த வேண்டாம். நீங்கள் இன்று பலமுடன் இருக்கலாம். ஆனால் காலம் உங்களை விட மிக வலிமையானது. ஒரு மரம் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். ஆனால், ஒரே ஒரு தீக்குச்சி கோடிக்கணக்கான மரங்களை எரித்துவிடும் திறமை கொண்டது. அதனால் நல்லவராக இருக்க வேண்டும் நல்லதை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சாக்சியின் இந்த பதிலடிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com