கொரேனா பரவலைத் தடுக்க அயோடின் கரைசலா??? அதிரடி காட்டும் புதுத்தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்க செய்யும் என்ற புதுத்தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ள இத்தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 3.12 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. பிரேசிலில் 45 லட்சத்தையும் தற்போது இந்தியாவில் 54 லட்சமாகவும் உயர்ந்து இருக்கிறது. இதுவரை ஒட்டுமொத்த உலகிலும் 9.64 லட்சம் பேர் இத்தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளைக் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சார்ஸ், கோவ்-2 வைரஸ் பரவலைத் தடுக்க அயோடின் கரைசல் உதவும் என்ற பரிந்துரையை விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி போவிடோன்-0.5%, 1.25% மற்றும் 2.5% என்ற அயோடின் மூன்று வெவ்வேறு செறிவுகளுக்கு எதிராக வைரஸின் மாதிரிகளை அவர்கள் பரிசோதித்தபோது 15 வினாடிகளுக்குள் வைரஸை முழுமையாக இவை செயலிழக்கச் செய்தது கண்டறியப்பட்டது. அதே சோதனை எத்தனால், ஆல்கஹால் மூலமும் நடத்தப்பட்டது. ஆனால் இதுபோன்ற நேர்மறையான முடிவை அது காட்டவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் 0.5 அயோடின் செறிவு கூட சார்ஸ், கோவ்-2 வைரஸை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கனடா பல்கலைகக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூக்கு மற்றும் வாய் ஆகியவை ஏ.சி.இ 2(ACE@) ஏற்பிகளை அதிக அளவில் கொண்டிருப்பதாகக் அறியப்படுகிறது. இவை மனித உடலில் கொரோனா வைரஸின் நுழைவு புள்ளிகளாக செயல்படும் செல்களாகும். இதனால்தான் கொரோனா வைரஸின் நுழைவு வாயிலை பாதுகாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். இப்படி நுழைவு வாயிலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தினால் பாதிப்பை குறைக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால் அயோடி கரைசலை நேரடியாகப் பயன்படுத்தலாமா என்பது குறித்து எந்த முடிவுகளும் இதுவரை வெளியாக வில்லை. இந்நிலையில் அயோடின் கரைசலைப் பயன்படுத்தி 15 வினாடிகளில் கொரோனா வைரஸை விரட்ட முடியும் என்ற தகவலை மட்டும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அது நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும் என்றும் கூறுப்படுகிறது.
இந்த வழிமுறையைப் பின்பற்றி கடுமையான அறிகுறிகளைப் பெறுவது தடுக்க முடியும். மேலும் நுரையீலுக்கு செல்லும் வைரசின் அளவை வெகுவாக குறைக்க உதவும் எனவும் நம்பப்படுகிறது. எனினும் வீட்டில் யாரும் இம்முறையை முயற்சி செய்ய வேண்டாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். நாசியை (மூக்கு) இந்தக் கரைசலை வைத்து சுத்தம் செய்யும் முறையை மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout