ரூ.5,136 கோடி மதிப்பிலான முதலீடு: 6,555 பேருக்கு வேலை!!! அதிரடி காட்டும் தமிழக முதலமைச்சர்!!!

 

இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு கொரோனா காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களாக இதுகுறித்த அறிவிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டிவிட்டர் பதிவில் “கொரோனா பேரிடரிலும், மக்களைக் காப்பதோடு தொழில் வளர்ச்சியை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று மட்டும் 16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்கிட கையெழுத்து ஆகியிருக்கிறது. இதன்மூலம் சுமார் 6,555 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கும் வகையிலான 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வைத்து கையெழுத்தானது. இதில் பெரும்பலான தமிழகத்தைச் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 6,555 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய இணையத்தள சேவைத் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. www.investingintamilnadu.com என்ற இணையத் தளத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முதலீட்டு நிறுவனத் தகவல்களையும் இதில் நேரடியாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் “அதானி எண்டர் பிரைசஸ்” நிறுவனம் சார்பில் ரூ.2,300 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். காஞ்சிபுரம் சிப்காட் வல்லம் வடகால் தொழிற் பூங்காவில் சூப்பர் ஆட்டோ போர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.500 கோடி முதலீட்டில் 800 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலான போர்ஜ் ஸடீல் மற்றும் அலுமினியம் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் திட்டம்.  

சிப்காட் வல்லம் வடகால் தொழிற் பூங்காவில் உள்ள ஊர்புளோ எண்டர் பிரைசஸ் நிறுவனம் சார்பில் ரூ. 320 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை வழக்கும் போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டம். நெல்லை மாவட்டம் சிப்காட் கங்கை கொண்டான் தொழிற் பூங்காவில் ரூ. 250 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலை அளிக்கும் ஏடிசி டையர்ஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப மேம்பாட்டு திட்டம். திண்டுக்கல் மாவட்டம் டாப் அணில் மார்க் கெட்டிங்க் நிறுவனம் சார்பில் ரூ.100 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளிக்கும் சேமியா உற்பத்தி திட்டம். செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் ரூ.750 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சிங்கப்பூர் பிரின்சிடான் நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்.

காஞ்சிபுரம் செய்யாறு பகுதியில் அமையவுள்ள பிபிஎல்–எப்டிஏ நிறுவனம் சார்பில் ரூ.500 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மின்னணு வாகனத்திற்கான லித்தியம் ஐயர்ன் பாட்டரி உற்பத்தி செய்யும் திட்டம். ரூ.150 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வழக்கும் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் இ-பைக் உற்பத்தி திட்டம். மேலும் அமெரிக்க நிறுவனங்களின் 7 தொழில் நுட்பத் திட்டங்கள்.  சென்னையிலுள்ள டையர்ஸ் நெட்வொர்க் சொலுசன்ஸ் ஐ.என்சி சார்பில் ரூ.25 கோடி மதிப்பில்  20 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பவர் புட் அண்டு அக்ரி சப்ளை செயின் திட்டம்.

சென்னையிலுள்ள டிஜிட்டல் ஹெல்த் ஸ்வைர்பே சார்பில் ரூ.23 கோடி முதலீட்டில் 30 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம். சென்னை டிஜிட்டல் பேமெண்ஸ்ட் பிளெத்தி நிறுவனம் சார்பில்  ரூ.22 கோடி 20 பேருக்கு வேலை வழங்கும் திட்டம். மற்றும் பிட்வைஸ் அகாடமி சார்பில் ரூ.21 கோடி  முதலீட்டில் 100 பேருக்கு வேலை வழங்கும் வகையிலான இலெர்னிங்க திட்டம். ரேடஸ் டிஜிட்டல் (ஹார்மனி ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 21 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை வழங்கும் வகையிலான பைண்டெக் அண்டு பிட்னஸ் அப்ளிகேஷன்ஸ் திட்டம். கண்டிநூப் நிறுவனம் சார்பில் ரூ.20 கோடி முதலீட்டில் 35 பேருக்கு வேலை வழங்கும் வகையிலான சாஸ் பேஸ்ட் எண்டர் பிரைசஸ் ரிஸ்க் ஆடோமேஷன் திட்டம் போன்ற 16 திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

More News

செல்பி மோகத்தால் நடு ஆற்றில் சிக்கிய இளம்பெண்கள்: போராடி காப்பாற்றிய மீட்புக்குழுவினர்

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் தலைவிரித்தாடி வருகிறது. செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் உயிரை இழந்து வரும் பரிதாபமான செய்திகள் தினமும்

12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டியூஷன் வாத்தியார் மீது வழக்குப்பதிவு

12 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த டியூஷன் வாத்தியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செப்டம்பர் 19 முதல் களமிறங்குகிறார் 'தல': அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

செப்டம்பர் 19 முதல் அதிகாரபூர்வமாக 'தல' களம் இறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை இப்படித்தான் அகற்ற வேண்டும்… மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!

பெருந்தொற்று நேரத்தில் சுய பாதுகாப்பு மிக அவசியம் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.

சாலைகள், வீதிகள், தெருக்கள், கார்கள் என எங்கு பார்த்தாலும் பிணம்!!! கொரோனாவால் தத்தளிக்கும் நாடு!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.