அச்சமூட்டும் வெட்டுகிளிகளின் படையெடுப்பு: தாக்குதலுக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் கூட்டணி அமைக்கிறதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆண்டுதோறும் இந்திய எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் பாகிஸ்தான் மாநிலங்களில் இருந்து பாலைவன வெட்டிக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் மாநிலங்களின் பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் விளை நிலங்களை கடுமையாகத் தாக்கி அழிக்கிறது. கூட்டம் கூட்டமாக பல கிலோ மீட்டர்களுக்கு படையெடுக்கும் இந்த வெட்டுகிளிகள் பெரும்பாலும் கோடை காலத்தை அடுத்து மழைக் காலத்தின் ஆரம்பத்தில் இப்படி படையெடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் விளைநிலங்களை அழித்து விட்டு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தானை நோக்கி இந்த வெட்டுக்கிளிகள் படையெடுக்கவும் செய்கிறது. தற்போதும் இந்திய மாநிலமான ராஜன்தானில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வெட்டுகிளிகள் கூட்டம் மத்தியப் பிரதேசத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த வாரம், ஒரு சதுர கிலோ மீட்டர் முதல் பல நூறு சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு பல கோடிக்கணக்கான வெட்டுகிளிகள் படையெடுக்க ஆரம்பித்தன. இதன் விளைவால் கராச்சியில் பல ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் விளைநிலங்கள் நாசமாகி இருக்கிறது. இதன் பாதிப்புகள் முழுவதும் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது இந்த வெட்டுகிளிகள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஸ் சிங்கின் சொந்த தொகுதியான செஹீர் மாவட்டத்தில் தற்போது இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் தஞ்சம் புகுந்து இருக்கிறது. சுற்றியுள்ள நீலமூச், மால்வா நிமிர், போபால் போன்ற பகுதிகளிலும் இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வெட்டு கிளிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது குறித்து விவசாயிகளுக்கு அம்மாநில வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் ஒலியை எழுப்பி விரட்டுவது, மருந்து தெளித்து விரட்டுவது போன்ற வேலைகளில் விவசாயிகள் ஈடுபடுவர். வெட்டுகிளிகளின் தற்போதைய படையெடுப்பால் சுமார் 8000 கோடி மதிப்புள்ள பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவலைத் தெரிவித்து உள்ளனர். ஒரு சதுர கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெட்டுகிளி கூட்டத்தில் சுமார் 40 மில்லியன் வெட்டுகிளிகள் இருப்பதாகவும் அந்த அளவுள்ள வெட்டுகிளிகளால் சுமார் 35 ஆயிரம் பயிர்களை நாசம் செய்ய முடியும் எனவும் விஞ்ஞானிகள் கணித்து இருக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வெட்டுக்கிளிகள் சுமார் 2.3 கிலோ உணவை உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதன் ஓய்வு நேரம் என்பது இரவு 7-9 மணி எனவும் இந்நேரத்தில் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெட்டுகிளி படையெடுப்பினால் பஞ்சாப், ஹிரியாணா, கங்கை –சமவெளி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாவட்ட விளைநிலங்கள் மோசமாக பாதிக்கப் பட போகிறது என வேளாண் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர். அதோடு இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பாகிஸ்தான், ஈரானுடன் இணைந்து செயல்படுவதற்காகத் திட்டம் தீட்டியுள்ளதாகவும் இந்த முத்தரப்பு இணைவிற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்குமா என்கிற ரீதியிலான கேள்விகள் தற்போது எழுந்துள்ளதாகவும் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்து நாளிதழ் வெளியிட்டு கட்டுரையில் வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்கு இந்தியா பாகிஸ்தானோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானோடு இருக்கும் முரண்பட்ட கருத்து நிலைகளால் இது சாத்தியமா என்ற சந்தேகமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆதரவு கோரிக்கைக்கு பாகிஸ்தான் இதுவரை எந்த பதிலையும் அளிக்க வில்லை எனவும் அந்தக் கட்டுரையில் தகவல் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் வெட்டுகிளிகளால் ஏற்படும் பாதிப்புக்கு சீனா ஆதரவாக பல வழிகளில் உதவி வருகிறது. தற்போது வெட்டுகிளிகள் உருவாக்கி இருக்கும் கூட்டம் அளவில் பெரியது என்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தால் கொரோனா சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை தனியாக சமாளிக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனவே பாகிஸ்தான் முத்தரப்பு கூட்டத்தில் இணைந்து வெட்டுகிளிகளை அழிக்க முன்வரலாம் என்ற ஆதரவு கருத்துகளையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள கட்டுரையில் வெட்டுகிளிகளால் பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம், விரயம் ஏற்பட போகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் நிதி அளிக்குமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உருவாகி இருக்கும் வெட்டுக்கிளி படையெடுப்பானது ஆப்பிரிக்காவில் இருந்து தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க பாலைவனங்களில் முட்டையிட்டு வெயில் காலத்தை அடுத்து படையெடுக்க ஆரம்பிக்கும் இந்தப் பூச்சியினம் சாதாரண வெட்டுக்கிளிகளை விட சற்று அளவில் பெரியதாக இருக்கிறது. யேமன், பக்ரைன், சவுதி அரேபியா, குவைத், ஈராக், பாகிஸ்தான், இந்தியா என நீண்ட தூரத்திற்கு இந்த வெட்டுக்கிளிகள் படையெடுக்க ஆரம்பிக்கின்றன. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயிர்களை அழித்து விடுவதால் கடும் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவோடும் இந்த படையெடுப்பு நின்று விடுவதில்லை. அடுத்து பங்களாதேஷின் எல்லையை தொடுவதால் மேலும் பல நாடுகள் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடிவத்தில்லை.
இத்தகைய நெருக்கடியை சமாளிக்க தற்போது இந்தியா பாகிஸ்தானுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் இந்தியாவின் செயல் திட்டத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளிக்குமா என்ற சந்தேகம் வலுவான நிலையிலேயே இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments