சிவப்பு சிக்னலை தாண்டினால் தானாக நிற்கும் ரயில்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

  • IndiaGlitz, [Thursday,June 22 2017]

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் விபத்துக்கள் மூலம் மட்டுமே சுமார் 27ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தேசிய குற்றப்பதிவுக் காப்பகத்தின் புள்ளிவிபரம் கூறுகின்றது. எனவே ரயில் விபத்துக்களை குறைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே துறை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது.

இந்த வகையில் சிக்னல்களின் சரியான இயக்கம் ரயில் பாதுகாப்பின் முக்கிய பணியை ஆற்றுகின்றது. எனவே சிக்னலை நவீன தொழில்நுட்பத்தில் இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி சிக்னல், ரயில்பாதை, ரயில் எஞ்சின் ஆகியவை கேபிள் மற்றும் சென்சாரால் இணைக்கப்பட்டு சிகப்பு சிக்னல் இருக்கும்போது ரயில் சிக்னலை தாண்டினால் உடனடியாக சென்சார் மூலம் ரயில் நிறுத்தப்படும் தொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சோதனை முயற்சியாக இந்த தொழில்நுட்பம் சென்னை செங்கல்பட்டு, அரக்கோணம் ஜோலார்பேட்டை வழித்தடங்களிலும் விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் ரயில்கள் மோதிக் கொள்ளும் விபத்துகள் முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில் ஓட்டுனர்கள் கருத்து கூறியபோது, ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் சிவப்பு சிக்னல் தாண்டிய பிறகு, ரயில் தானாக நிற்கும் தொழில்நுட்பத்திற்கு பதிலாக சிக்னல் அருகே நெருங்கும்போதே ரயில் தானாக நிற்கும் வகையில் புதிய மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ரயில், சிக்னல் கடந்து செல்வதை முற்றிலும் தடுக்க முடியும்” என்றும் கூறினர்.

இதேபோன்று சாலைகளிலும் சிவப்பு சிக்னலை மதிக்காமல் தாண்டி செல்லும் வாகனங்களை நிறுத்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இணைந்தது ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள். பாஜக உற்சாகம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது...

ரஜினியின் 'காலா' பட செட்டில் திடீர் விபத்து! ஒருவர் பரிதாப பலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து பிற நடிகர்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது...

பார்வையற்ற மாணவர்களை பறக்க வைத்த கபாலி-பைரவா நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'பைரவா' படங்கள் உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் மைம்கோபி பார்வையற்ற மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்....

விஜய்யின் சகோதர சகோதரி செண்டிமெண்ட் படங்கள்

இளையதளபதி விஜய் பேசும் வசனங்கள் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது 'அண்ணா' என்பது தான்.

ஸ்ரேயா ரெட்டியின் 'அண்டாவ காணோம்' இசை, டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி...