கொரோனா நேரத்தில் 4.0 இணையவழி தொழிற்துறை பட்டப்படிப்பு அறிமுகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவின் தாக்கம் 2020 வரை இருக்கும், அதுவரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டி வரலாம் என்று அச்சமூட்டும் அறிவுரைகளுக்கு மத்தியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இணையவழி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 4.0 சான்றிதழ் படிப்பானது தொழிற்துறை சார்ந்த கருவி இயந்திரங்கள், அதன் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு பாடத் திட்டங்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலை தூர கல்வி போன்றில்லாமல் இணையத்தின் வழியாகப் பாடத் திட்டங்களைக் கற்றுக்கொண்டு தேர்வுகளையும் இணையத்திலேயே எழுதலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்துக் கூறிய கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் தொழிற்துறையில் ஏற்பட்டு வரும் புரட்சிக்கேற்ப இளம் தலைமுறை மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். “தொழில்துறை 4.0” (Certificate Programme in Introduction to Industry 4.0) என்ற சான்றிதழ் படிப்பில் பிக் டேட்டா , டேட்டா அனலிட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ், இண்டர்நெட் ஆப் திங்ஸ், ஆன்மென்டட் ரியாலிட்டி, டிசைன் திங்கிங், சைபர் செக்யூரிட்டி, பிளாக்செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகிய பாடத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரங்களை www.b-u.ac.in, www.budca.in/cpii4 என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் பாரதியார் பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. கொரோனா தாக்கம் உங்கள் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறதா? கவலை வேண்டாம், இதுபோன்ற இணையவழி பட்டப்படிப்பை கற்று உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout