நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கலர் கலரான ஸ்வீட் அறிமுகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று உலகையே புரட்டி போட்ட நிலையில் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். பொதுவாக கொரோனா நோய்த்தொற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களைத் தாக்காது எனக் கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உலகச் சுகாதார நிறுவனம் இரண்டுமே வலியுறுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்போது கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
எனவே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்களில் தற்போது மூலிகை மருந்து, சில வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் தற்போது, தனது வாடிக்கையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இனிப்பு வகைகளைத் தயார் செய்து கொடுத்து அசத்தி வருகிறது.
இதுபற்றி கடையின் உரிமையாளர், “கொரோனாவை எதிர்த்துப் போராடுவதறகு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாகக் கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில் 15 வெவ்வேறு மசாலாப் பொருட்களை கலந்து இந்த இனிப்பு வகைகளை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு இனிப்பும் ரூ.25 என விற்பனை செய்கிறோம்” எனக் கூறியிருக்கிறார். இந்த இனிப்புகளை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக வாங்கிச் செல்கின்றனர். இனி நம்மூரில் இதுபோன்ற கடைகளை எதிர்ப் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout