விஜய் படத்தில் அறிமுகம், அஜித் படத்தில் விருது: டி.இமான் பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் படத்தில் அறிமுகமாகி தல அஜித் படத்தில் விருது கிடைத்துள்ளது தனது பெருமையான ஒன்று என்று டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமான் அவர்களுக்கு விஸ்வாசம் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்கு கிடைத்தது. இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் டி.இமான் தேசிய விருது பெற்றதை அடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தளபதி விஜய் அவர்களும் தல அஜித் அவர்களும் தனிப்பட்ட முறையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த டி.இமான் அவர்கள் இருவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய இசைப்பயணம் அண்ணன் விஜய் அவர்களின் ’தமிழன்’ திரைப்படத்தில் இருந்து ஆரம்பமானது என்றும் தற்போது தல அஜித் அவர்களின் விஸ்வாசம் திரைப்படத்தில் தனக்கு தேசிய விருது என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமையுடன் அந்த டுவீட்டில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்களும் ஒரே நேரத்தில் தேசிய விருது பெற்ற டி.இமான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
Glad to witness and come across amazing humans more than stars! pic.twitter.com/ZNagCkCQEO
— D.IMMAN (@immancomposer) March 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments