விஜய்யை ரசிக்கும் பாடகரை அழைத்து கெளரவப்படுத்திய கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாத நான்' என்ற பாடலை கேரளாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பவர் பாடிய வீடியோ இண்டர்நெட்டில் வைரலாகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருக்கு ஷங்கர் மகாதேவன் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி திறமை எங்கிருந்தாலும் அதனை பாராட்டும் குணமுள்ள கமல்ஹாசன், நேற்று ராகேஷ் உன்னியை தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வரவழைத்து கெளரவித்தார். இந்த செய்தி நேற்று டிரண்டில் இருந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஒரே நாளில் பெரும்புகழை பெற்றது மட்டுமின்றி ராகேஷ் உன்னியை தங்கள் படங்களில் பாட வைக்க ஜிப்ரான் உள்பட ஒருசில இசையமைப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராகேஷ் உன்னி நமக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி பேட்டியில், 'எனக்கு கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரையும் பிடிக்கும். நான் விஜய் அவர்களின் தீவிரமான ரசிகர் என்றும் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர் ஒருவரை அழைத்து அவரிடம் ஒளிந்திருந்த இசைத்திறமையை வெளிபடுத்திய கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
And this happened ... strengthening my belief and what makes me wake up every day with hope: Hard-work and talent never gets unnoticed.#RakeshUnni sings ‘unnai kaanadhu’ song from #Vishwaroopam before @ikamalhaasan Sir! Hoping to Record him soon ✌?? pic.twitter.com/0xwq4CzHJ7
— Ghibran (@GhibranOfficial) July 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com