சிம்கார்டு இல்லாத செல்போனை பயன்படுத்துகிறாரா ப்ரியாவாரியர்?

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

சமீபத்தில் வெளியான 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் புருவ நடனம் மற்றும் கண்ணசைவின் மூலம் இணையதளத்தில் உலகப்புகழ் பெற்றவர் ப்ரியாவாரியர். இந்த டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, ப்ரியா வாரியருக்கு வாய்ப்புகளும் குவிந்து வருகிறது

இந்த நிலையில் ப்ரியா செல்போன் பயன்படுத்த அவரது தந்தை அனுமதிப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ப்ரியா வாரியருக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் அவரது தாயார் செல்போனுக்குத்தான் வரும். அவரே பெரும்பாலான அழைப்புகளுக்கு பதில் சொல்லிவிட்டு ஒருசில அழைப்புகளுக்கு மட்டும் ப்ரியாவை பேச அனுமதிப்பாராம்

ப்ரியா வாரியரின் செல்போனில் சிம்கார்டே இல்லை என்றும் அவர் அந்த செல்போனில் இண்டர்நெட்டை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.