மாதவனின் அடுத்த படத்தில் சர்வதேச பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,February 25 2020]

நீண்ட இடைவேளைக்குப்பின் மாதவன் தமிழில் நடித்த ’இறுதிச்சுற்று’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது. அதனை அடுத்து விக்ரம் வேதா திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மாதவன், ‘ராக்கெட்டரி’ என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் சர்வதேச பிரபல பாடகியான மேரி சாண்ட்லர் ஹிக்ஸ் என்பவர் இணைந்துள்ளார். இது குறித்த தகவலை மாதவன் தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பிரபலம் ஒருவர் இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு ’விக்ரம் வேதா’ படத்தில் விஷயம் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு ஆணையம் அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினி கூறிய கருத்து ஒன்றுக்காக அவரிடம் விசாரணை நடத்த, இந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஒரு நபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது 

பெண் குரலில் மிரட்டி பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது!

நூற்றுக்கணக்கான ஆண்களிடம் பெண் குரலில் பேசி லட்சக்கணக்கான பணத்தை மிரட்டி பறித்த நெல்லை வாலிபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் 

'எருமைச்சாணி' விஜய் இயக்கத்தில் பிரபல நடிகர் 

மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றான 'எருமை சாணி சேனலுக்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

லவ் பண்றதே பைத்தியக்காரத்தனம் தான்: 'தாராள பிரபு' டிரைலர்

பாலிவுட் திரையுலகில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'டோனார் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'தாராளப் பிரபு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும்

'இந்தியன் 2' விபத்திற்கு பின் சுதாரித்த 'மாநாடு' தயாரிப்பாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 பேர் பரிதாபமாக பலியாகின