சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி?

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது வந்துள்ள தகவலின்படி சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் கவுண்டமணி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..

'ரஜினி முருகன்' படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில்தான் கவுண்டமணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கின்றார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக இந்த படத்தில் பணிபுரியவுள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் உள்பட மூன்றுவித கெட்டப்புகளில் நடிக்கவுள்ளார். 'ஐ' படத்திற்கு மேக்கப்மேனாக பணியாற்றிய ஹாலிவுட்டின் பிரபல மேக்கப் கலைஞர் சீன் ஃபுட், சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் போடவுள்ளார்.

More News

சுந்தர் சியின் அரண்மனையை கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

மறைந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்தும்...

விஜய்-அஜீத்-பவன்கல்யாண். சுசீந்திரனின் அடுத்த ஹீரோ யார்?

விஷால்-காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி

ஹாலந்து செல்கிறது சூர்யா படக்குழு

'மாஸ்' படத்திற்கு பின்னர் சூர்யா, வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது....

நள்ளிரவில் படமாகும் 'தல 56' கிளைமாக்ஸ்

அஜீத் நடித்து வரும் 'தல56' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மால் ஒன்றிலும்...

அறிமுக இயக்குனருடன் ரீ-எண்ட்ரி ஆகும் நமீதா

விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', அஜீத்துடன் 'பில்லா' உள்பட பல படங்களில் நடித்து ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக...