கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் நுழைந்தது போலீஸ் படை. பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,February 14 2017]
உச்சநீதிமன்றத்தின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சசிகலா தங்கியிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
தீர்ப்பு வெளியானவுடன் கூவத்தூரில் சொகுசு விடுதி அருகே இருந்த சமூக விரோதிகள் செய்தியாளர்கள் மீது கற்கள் எறிந்ததாகவும், இதனையடுத்து போலீஸ் படை சொகுசுவிடுதிக்குள் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சசிகலா உள்பட குற்றவாளிகள் மூவரும் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவை போலீஸார் கஸ்டடியில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.