சென்னை வெப்பநிலையில் திடீர் மாற்றம். பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை மக்களை குளிர்விக்க திடீரென ஆச்சரியப்படும் வகையில் பலத்த காற்றுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது, 'ஆச்சரியப்படும் வகையில் சென்னை கடற்கரையை நோக்கி புயல்போன்ற பலத்த காற்று வீசி வருகிறது. இது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதையே காட்டுகிறது. சூப்பர் கம்ப்யூட்டர் கூட கண்டுபிடிக்க முடியாத அளவில் சென்னை அருகே திடீர் வெப்ப மாற்றம் நிகழ்ந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுவிழந்தாலும் சென்னை நகர மக்கள் இன்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம். சென்னையில் பல பகுதிகளில் குறிப்பாக எழும்பூர், மைலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே இன்று அதிகபட்ச வெயில் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 40 டிகிரிக்கு மேல் இன்று வெயில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments