டிக் டாக் உள்பட 52 சீன செயலிகளை புறக்கணிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை: பரபரப்பு தகவல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக் அருகே உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியாவின் கால்வான் பகுதிக்கு நுழைந்ததால் தான் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் சீனாவின் அத்துமீறலை கண்டித்து இந்தியர்கள் சமூக வலைதளங்களில் ஆவேசமாக கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சீன பொருட்களை இனி பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பாக சீன செயலிகளை அனைவரும் தங்கள் மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கருத்து கூறி வருகின்றனர் 

இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்துள்ளது. அதில் 52 சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் இருப்பதாகவும் அதனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை சீனா மேற்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது

தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ள செயலிகளில் டிக்டாக், காண (GAANA மியூஸிக்  ஆப் ) , யுசி புரோசர், ஹலோ சாட், பப்ஜி கேம், ஷேர் ஹிட், சென்டெர், பியூட்டி ப்ளஸ், கிளின் மாஸ்டர், ஜூம் விடியோ மீட்டிங் ஆகிய செயலிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த செயலிகளில் இந்தியர்களை உளவு செய்யும் வாய்ப்பு இருப்பதால் இவைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது   

ஏற்கனவே சீனாவின் ஜூம் செயலி மூலம் மீட்டிங் நடக்கும்போது இந்தியர்கள் பலர் கண்காணிக்கப்பட்டது தெரிய வந்ததால் அந்த செயலியை மத்திய அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

தீவிர ரசிகரை 'மகனே' என அழைத்த கமல்: வைரலாகும் வீடியோ

பொதுவாக பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்களை அவர்களது ரசிகர்கள் பேசுவதும் பாடுவதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன

கூவத்தில் கொரோனா நோயாளியின் பிணம்: சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பியவர் என தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும்,

3வது நாளாக தொடரும் 2000ஐ தாண்டிய பாதிப்பு: தமிழக கொரோனா நிலவரம்

கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சமீபத்தில் அது ஆயிரத்தை தொட்டது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக

சென்னையில் மட்டும் பரிசோதனை ஏன்?  பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்துதா? கமல்ஹாசன் கேள்வி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே பரிசோதனை செய்து பிற மாவட்டங்களில் பரிசோதனையே செய்யாமல், கொரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது

கொலையா? தற்கொலையா?: சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில்?

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிறு அன்று தற்கொலை செய்துகொண்ட நிலையில்