எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வைத்துதான் பழக்கம். 'புலி' இசைவிழாவில் விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சிம்புதேவன், நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிகுமார், டி.ராஜேந்தர், ஜீவா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பேசியவர்களின் தொகுப்பு:
இந்த விழாவில் டி.ராஜேந்தர் அவர்களின் பேச்சு பெரும் மாஸ் ஆக இருந்தது. அவர் பேசியதில் இருந்து ஒருசில துளிகள்: "விஜய் ஒரு தூய உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு தமிழனின் மனதிலும் அவர் நிற்கிறார். விஜய் எனக்கு புடிச்ச ஒரு தமிழன். நல்ல நண்பன். விஜய்கிட்ட இருக்கிறது நட்பு, நான் பார்க்கல அவர்கிட்ட தப்பு. சிம்புவுக்கு ஒரு அண்ணா மாதிரி இருக்கிறது விஜய் தான். இதான் உண்மை. உணவு நல்லா இருக்கணும்ன்னா தேவை உப்பு, உறவு நல்லா இருக்க தேவை நட்பு. தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி என தனது வழக்கமான பஞ்ச் டயலாக்குகளை வரிசையாக பேசத் தொடங்கினார்.
விநியோகிஸ்தர் காஸ்மோ சிவா: நான் இதுவரை எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. ஆனால் நான் விஜய் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்.
நந்திதா ஸ்வேதா: 'புலி' படத்தில் 'குமுதா' என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த சிம்புதேவனுக்கு நன்றி. விஜய்யுடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வைரமுத்து: தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கமல்ஹாசனுக்கு பின்னர் திரைப்படங்களில் பாடும் ஒரு நடிகர் விஜய்தான்.
ஸ்ரீதேவி: நான் மும்பைவாசியாக மாறிவிட்டாலும், நான் எப்போதுமே தமிழகத்தின் மகள்தான். தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு.
தேவிஸ்ரீ பிரசாத்: எனது டியூனில் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் பாடியதற்கு மிகவும் நன்றி. ஏண்டி ஏண்டி பாடல் சூப்பர் ஹிட் ஆகும். இந்த விழா எனக்கு ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசு.
சிம்புதேவன்: இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க நான் ஸ்ரீதேவியை முதன்முதலில் அணுகியபோது, விஜய்யுடன் பணிபுரியவுள்ளதால் கண்டிப்பாக இந்த வாய்ப்பை பரிசீலனை செய்கிறேன் என்று கூறினார். புலி' படத்தில் கதை மட்டுமே நான் எழுதியுள்ளேன். ஆனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியற்கு விஜய்தான் காரணம்.
எஸ்.ஏ.சந்திரசேகர்: விஜய்யின் வளர்ச்சிக்கு நான் அடித்தளம் மட்டுமே போட்டேன். விஜய்யின் இந்த உயரமான வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குனர்களுக்கு எனது நன்றி.
பேரரசு: வாலுக்கு மட்டுமில்லை, தல'க்கும் சப்போர்ட் செய்பவர் விஜய்
ஸ்ருதிஹாசன்: நான் சினிமாவில் நுழையும்போது ஒரு படத்திலாவது விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.
எஸ்.ஜே.சூர்யா: நன்றியின் மறுபெயர் விஜய். புலி' என்ற டைட்டில் இளையதளபதிக்கு மட்டுமே பொருந்தும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments