பொக்கேவுக்கு பதில் செக்: இரும்புத்திரை ஆடியோ விழாவில் அசத்திய விஷால்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் இயக்குனர் மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கே கொடுத்து வரவேற்பு கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் பொக்கேவுக்கு செலவு செய்யப்படும் பணத்தை இரண்டு செக்காக மாற்றி இரண்டு ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு விஷால் அளித்துள்ளார்.

ஒருசில நிமிடங்களுக்கு பின்னர் குப்பைக்கு போக்கும் பொக்கேவுக்கு பதிலாக இரண்டு மாணவர்களின் கல்வி விளக்கை ஏற்றி வைத்த விஷாலின் அசத்தலான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

பேருந்து கட்டணம் உயர்வு எவ்வளவு? ஒரு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி இயக்குனர்

சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவை சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம்.

கமல்ஹாசனின் அரசியலுக்கு ஆதரவு தரும் மன்னர் பரம்பரையினர்!

கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினமே தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

'தளபதி 62' படத்தில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும்?

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'விஜய் 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடைபெற்ற நிலையில் இன்று வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருந்து விஜய்யின் கெட்டப்பை ஊகிக்க முடிகிறது.

நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன்: டுவிட்டர் பயனாளிக்கு பதிலடி கொடுத்த 'அருவி' தயாரிப்பாளர்

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து இரண்டு விஜேக்கள் பேசிய விவகாரம் திரையுலகினர்களை கொதிப்படைய செய்துள்ளது.