ஃபாலோ செய்யும் பணக்காரர்களுக்கு அரைநிர்வாண புகைப்படம்.. இன்ஸ்டா பிரபலம் கைது..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்யும் பணக்காரர்களுக்கு அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த மாடல் அழகி ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கு மேல் ஃபாலோயர்களை வைத்துள்ள மாடல் அழகி ஜஸ்னீத் கவுர். இவர் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள், அரை நிர்வாண புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் உள்ள பணக்கார தொழிலதிபர்களை குறி வைத்து அவர்களுடன் சேட் செய்வார் என்றும் பின்னர் அவர்களுக்கு அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுக்காதவர்களை அவர் அடியாட்களை வைத்து மிரட்டும் சம்பவமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் லூதியானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஜஸ்னீத் கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவரிடம் இருந்து விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜஸ்னீத் கவுர் சார்பில் பணம் கேட்டு மிரட்டிய சந்து என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Punjab police recover Jasneet Kaur's BMW car, According to the complainant, Jasneet bought this car with the extortion money taken by threatening people. pic.twitter.com/pO2W3ZbU20
— Nikhil Choudhary (@NikhilCh_) April 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com