தமிழ் நடிகை பதிவிட்ட புகைப்படத்தை உடனடியாக தடை செய்த இன்ஸ்டாகிராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது, தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக பேசுவது, கிண்டலடிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பது என சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நடிகை கஸ்தூரி சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டார். ஆனால் அவரால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க முடியாததால் இரண்டே வாரத்தில் வெளியேறினார்
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கஸ்தூரி அவ்வபோது புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த கஸ்தூரி, சமீபத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் திடீரென தடை செய்து நீக்கிவிட்டது. இன்ஸ்டாகிராம் விதிகளுக்கு இந்த புகைப்படம் புறம்பானது என்று கூறி கஸ்தூரி பதிவு செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிவிட்டது. அந்த புகைப்படம் எதற்காக நீக்கப்பட்டது என்று கஸ்தூரிக்கும் மற்ற இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கும் புரியவில்லை.
இதைவிட சர்ச்சைக்குரிய புகைப்படத்தை கஸ்தூரி பதிவு செய்தபோதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த இன்ஸ்டாகிராம் இந்த செல்பி புகைப்படத்தை ஏன் நீக்கியது என்பது தற்போது வரை யாருக்கும் புரியவில்லை.
Instagram keeps removing my pic.... And accusing me of violating their rules- what rule has this post possibly violated? @instagram pic.twitter.com/uiHCxgvuzq
— Kasturi Shankar (@KasthuriShankar) October 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments