"விஜயா அவன வந்து அடி " பாட்டி சொன்ன வார்த்தை , விஜயகாந்தின் அன்பு - சமுத்திரக்கனி சொன்ன சுவாரசியம்.
Send us your feedback to audioarticles@vaarta.com
"விஜயா அவன வந்து அடி " பாட்டி சொன்ன வார்த்தை , விஜயகாந்தின் அன்பு - சமுத்திரக்கனி சொன்ன சுவாரசியம் ....
நடிகர், நடிகர் சங்கத் தலைவர், கட்சித் தலைவர் என பன் முகங்களோடு மக்களின் இதயங்களை வென்ற விஜயகாந்த் மறைந்து மூன்று மாதங்களை கடந்துவிட்டது , இன்னும் மூன்று தலைமுறைகள் கடந்தாலும் கேப்டனுக்கான இடமும் அவரது பெயரும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று ஒரு வருடத்தில் 18 படங்கள் நடித்த ஒரே கலைஞன் கேப்டன் மட்டும்தான் .
அந்த வரிசையில் கேப்டனின் மனசு போலவே "நெறஞ்ச மனசு " என்ற படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி , அந்தவகையில் சமீபத்தில் இந்தியாக்ளிட்ஸ் சேனலுக்கு சமுத்திரகனி அளித்த பேட்டியின் கேப்டனுடன் பணியாற்றிய நாட்களில் உள்ள அனுபவங்களை பகிர்ந்து மனம் கலங்கி உள்ளார் .
சமுத்திரக்கனி பேசுகையில் உண்மையில் கேப்டன் இல்லையென்ற தருணம் மிகப்பெரிய இழப்பு என்றும் , மேலும் தான் நெறஞ்ச மனசு திரைப்படத்தில் அவருடன் பணியாற்றும்போது நடந்து சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஷூட்டிங் ஷபாட்டில் ஒரு பாட்டியுடன் நடந்து ஒரு சம்பவம்தான் நியாபகம் வருகிறது என்றார் , விஜயகாந்த நடித்துக்கொண்டு இருக்கும்பொழுது தூரத்தில் இருந்துவந்த பாட்டி " விஜயகாந்த் இங்க வா ..
ரேஷன் கடைல மண்ணெண்ணை ஊத்தும்போது கொறச்சி கொறச்சி ஊத்துறான் அவனவந்து ஆடி " னு பாட்டி சொன்னதுக்கு கேப்டன் அவர்கள் பாட்டியை கட்டியணைத்து குழந்தைக்கு புரியவைப்பது போல பேசி அன்ப வெளிப்படுத்துவார் என்று சொல்லி புரித்தார் சமுத்திரக்கனி மேலும் விஜயகாந்த் கட்சி துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டது இன்று நேற்று நடந்த நிகழ்வு கிடையாது.
அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாரம் ஒரு முறை ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசி வந்தார்.இதற்காகவே அவர் நான்கு நபர்களை வேலைக்கு நியமித்து வைத்திருந்தார் வாராவாரம் அவர்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு பிறகு விஜயகாந்த்திடம் வந்து விஷயங்களை தெரிவிப்பார்கள்.
இது 20 வருடமாகவே தொடர்ந்து நடந்து வந்தது. இதை எந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலே செய்தது கிடையாது அப்படி கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட கோட்டைதான் விஜயகாந்தின் கட்சி அதனால் தான் அது இவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி. மேலும் இது தொடர்பான முழு பேட்டியை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com