போனை திருடிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய சென்னை போலீஸ்… சுவாரசியச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,September 21 2020]

 

13 வயது சிறுவன் சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் போலீசிடம் மாட்டிக் கொண்டபோது போலீசாரே அந்தச் சிறுவனுக்கு ஒரு செல்போனை பரிசாக வழங்கிய சுவாரசியச் சம்பவமும் நடைபெற்று இருக்கிறது.

செல்போன் திருடிய சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் தான் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவன் என்பதைச் சிறுவன் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா தாக்கல் காரணமாக தன்னால் ஆன்லைனில் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்பா ஒரு பிஸ்கட் கடையில் வேலைப் பார்த்து வருகிறார். அம்மா வீட்டு வேலை செய்துவருபவர் என்றும் கூறியுள்ளார். தனக்கு படிக்கும் ஆர்வம் இருப்பதையும் அச்சிறுவன் போலீசிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செல்போன் திருட்டு சம்பவத்தில் தங்களுக்கு உதவி செய்தால் உனக்கு ஒரு செல்போனை தருகிறோம் என்று உள்ளூர் ரவுடிகள் கும்பல் தெரிவித்ததால் மட்டுமே இந்தச் சம்பவத்தை செய்ததாகவும் அந்தச் சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளார். சிறுவன் கூறியதைக் கேட்ட காவல் துறையினர் நெகிழ்ந்து போய் புதிதாக ஒரு செல்போனை வாங்கி அச்சிறுவனிடம் நீட்டியிருக்கின்றனர். இதனால் அச்சிறுவன் கண்ணீர் மல்க காவல் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்து இருக்கிறான். இச்சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.