நட்சத்திர திருமணம்- குதிரையேற்ற வீரரை கைப்பிடித்த பில்கேட்ஸின் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்தின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ்(28) விளையாட்டு வீரரான நெயில் நாசர்(30) என்பவரை காதலித்து இந்த மாதம் அக்டோபர் 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணத்தில் பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் இருவரும் கலந்து கொண்டனர்.
உலகின் 4 ஆவது பணக்காரராக இருந்துவரும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் கடந்த மே மாதம் தங்களது 27 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 3 வாரிசுகள் உள்ள நிலையில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த Equestrian குதிரையேற்ற வீரர் நெயில் நாசர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் நியூயார்க்கில் உள்ள ஒரு குதிரைப் பண்ணையில் எளிமையாக நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த விழாவில் பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் இருவரும் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியுள்ளனர்.
கொரோனா காலத்தில் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தனது மூத்த மகள் ஜெனிபருக்கு பில்கேட்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு நியூயார்க்கில் 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரைப் பண்ணையை பரிசாக அளித்துள்ளார். காரணம் ஜெனிபரும் ஒரு தேர்ந்த குதிரையேற்ற வீரர். இவர் தனது 6 வயதில் இருந்தே குதிரையேற்றத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.
இதைத்தவிர ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் பட்டம் வென்ற நெயில் நாசரை அதே பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனித உயிரியியல் துறையில் பட்டம் பெற்ற ஜெனிபர் கேட்ஸ் சந்தித்துள்ளார். மேலும் குதிரையேற்றத்தில் இருவருக்கும் ஆர்வம் இருந்த நிலையில் இவர்களது மனமும் ஒன்றுபட்டிருக்கிறது. இதையடுத்து கடந்த ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
நெயில் நாசர் 2013, 2014, 2017 என 3 முறை உலகக் கோப்பை போட்டிக்கு குதிரையேற்றப் பிரிவில் தகுதிப் பெற்ற ஒரு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதே இவருடைய கனவாக இருக்கிறது. இதைத்தவிர Nassar stables LLL எனும் வணிக நிறுவனத்தையும் இவர் துவங்கி நடத்தி வருகிறார். அதேபோல ஜெனிபர் எவர்கேட் ஸ்டேபில்ஸ் எனும் நிறுவனத்தை நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CVL0CeoAQTa/
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments