close
Choose your channels

இஞ்சி இடுப்பழகிக்காக 12 கிலோ எடை கூடிய அனுஷ்கா

Tuesday, July 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னணியில் இருக்கும் நடிகைகள் பொதுவாக தங்கள் உடலமைப்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிர முயற்சிகள் எடுத்து கொள்வார்கள். ஆனால் அனுஷ்கா இதில் வித்தியாசமானவர். தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக உடலை மெலிய வைப்பதும், வெயிட் ஏற்றுவதும் இவருக்கு கை வந்த கலை.

சமீபத்தில் வெளியான பாகுபாலி' படத்தின் சக்ஸஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அனுஷ்காவை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் அவர் சுமார் 12 கிலோ உடல் எடை கூடி குண்டாக காணப்பட்டார். தற்போது நடித்து கொண்டிருக்கும் தமிழ், தெலுங்கு இருமொழி படம் ஒன்றிற்காக உடல் எடையை அவர் கூட்டியிருப்பது பின்னர்தான் தெரிந்தது.

ஆர்யாவுடன் அவர் நடித்து வரும் 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக இயக்குனரின் ஆலோசனையின் பேரில் 12 கிலோ எடையை கூட்டியுள்ள அனுஷ்கா, இன்னும் சில நாட்களில் 'பாகுபலி 2' படத்திற்காக மீண்டும் நார்மல் உடை எடைக்கு திரும்பவுள்ளார். அவரே ஒரு யோகா டீச்சர் என்பதால், உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் அவருக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என கூறப்படுகிறது.

தமிழில் இஞ்சி இடுப்பழகி, தெலுங்கில் சைஸ் ஜீரோ' ஆகிய டைட்டில்களில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்காவுடன் சோனால் செளஹான், ஊர்வசி, மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நாகார்ஜுனா, சிறப்பு தோற்றத்திலும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி' புகழ் எம்.எம்.கீரவானி இசையமைக்கும் இந்த படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment