காதல் தோல்விக்காக இனியா ஆடிய லுங்கி டான்ஸ்
- IndiaGlitz, [Monday,July 27 2015]
வாகை சூடவா படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் மெளனகுரு, சென்னையில் ஓர் நாள் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை இனியா, தற்போது 'கரையோரம்' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் 'காதல் தோல்வி' கான்செப்ட் உடைய வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.
இதுகுறித்து இனியா கூறியபோது, 'கரையோரம்' படத்தின் நாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத் அவர்களின் நண்பர்கள் தயாரிக்கும் வீடியோ ஆல்பம் ஒன்றுக்கு நடனம் ஆட என்னிடம் கேட்டார்கள். அந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. காதல் தோல்வியை ஜாலியாக குத்துப்பாட்டு மூலம் கூறும் ஸ்டைல் எனக்கு பிடித்திருந்தது. இந்த ஆல்பத்தில் கணேஷ் பிரசாத்துடன் நான் இணைந்து ஆடியுள்ளேன்.
லுங்கி காஸ்ட்யூமில் நான் ஆடிய ஸ்டெப்ஸ் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது எனக்கே ஒரு புதுமையான அனுபவம். எனக்கு கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் டான்ஸ் அனுபவம் இருந்ததால் இந்த ஆல்பத்திற்கு எளிதாக ஆட முடிந்தது.
இதே குழுவினர் சமீபத்தில் 'பல்பு' என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.