சந்தைக்கு வரும் பறக்கும் கார்கள்… இந்திய மதிப்பில் விலை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
எரிபொருள் வாகனங்களைப் பொறுத்த வரையில் தற்போது ஆட்டோமேட்டிக் கார்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது நெதர்லாந்து நிறுவனங்கள் தயாரித்த பறக்கும் கார்கள்(Flying Cars) இங்கிலாந்து நாட்டில் சந்தைக்கு வந்துள்ளன. இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்தப் பறக்கும் கார்களை வாங்குவது குறித்தும் பயன்படுத்துவது குறித்தும் சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பறக்கும் கார்கள் என்பது சாலையில் ஒரு குட்டி ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்றுதான் நின்றிருக்கும். ஆனால் இந்த கார்கள் நொடிப் பொழுதில் ஒரு பறக்கும் காராக மாறி வானத்தில் பறக்க ஆரம்பித்துவிடும். அந்த வகையில் தற்போது நெதர்லாந்து நிறுவனம் தயாரித்த பறக்கும் கார்களான ஏரோமொபில்(AeroMobil), அஸ்கா (Aska), மோல்லர் ஸ்கைகார்400 (Moller Skycar), டெர்ராபூஜியா (Terrafugia), ஸ்கைட்ரைவ்(SkyDrive), பால்-வி (Pal-V) போன்ற கார்கள் சந்தைக்கு வந்து இருக்கின்றன.
இந்தக் கார்களை வாங்க பெரும் பணக்காரர்கள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இந்தக் கார்களை விலைக்கு வாங்குவதைவிட அதை ஓட்டக் கற்றுக்கொள்வதுதான் படு சிரமமாக இருக்கும் என பெண்டகன் மோட்டார் குழுமம் நடத்திய ஒரு ஆய்வில் தெரிவித்து உள்ளது.
வரும் 2022 முதல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கும் இந்த பறக்கும் கார்களை ஓட்டக் கற்றுக் கொள்வது பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் இப்போதே சில பயிற்சி நிறுவனங்கள் இந்தப் பறக்கும் கார்களை ஓட்டுவதற்கு பயிற்சி வழங்கி வருகிறதாம்.
இதனால் பயிற்சிக் கட்டணம், காப்பீட்டு கட்டணம், பறப்பதற்கான உரிமைக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் எனப் பல வசதிகளையும் சேர்ந்து ஒரு பறக்கும் காரை வாங்கி பயன்படுத்துவது பெரிய சாவலாக காரியம் என்றும் பெண்டகன் மோட்டார் குழுமம் தெரிவித்து உள்ளது.
இத்தனை கட்டணங்களையும் சேர்த்து ஒரு பறக்கும் காரை வாங்குவதற்கு இங்கிலாந்து பண மதிப்பில் 535,831 யுகே டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. அமெரிக்க மதிப்பில் இது 742,498 எனவும் இந்திய மதிப்பில் ரூ.6 கோடி எனவும் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்தக் கார்கள் எதிர்காலத்தில் ஒரு தொழில்நுட்ப புரட்சியாக வலம்வரும் எனவும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments