தான் படித்த கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்ஃபோசிஸ் நந்தன் நீலேகணி!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்துவரும் நந்தன் நீலேகணி இந்தியாவின் முக்கிய ஐஐடி நிறுவனங்களுள் ஒன்றான பாம்பே ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், தலைமைச் செயல் இயக்குநர் என்று பல்வேறு பதவிகளை வகித்துப் பின்னர் இணை நிறுவனராக இருந்துவரும் நந்தன் நீலேகணி பாம்பே ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.315 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிதி அந்த நிறுவனத்தின் மேற்கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நந்தன் நீலேகணி அங்குள்ள பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். பின்பு மும்பை ஐஐடி நிறுவனத்தில் பொறியியல் பட்டத்தை முடித்துள்ளார். அடுத்து பத்னி கம்பியூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தொழிலதிபர் நாராயண மூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றத் துவங்கினார். முதலில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக தனது பணியைத் துவங்கிய அவர் முதன்மை நிர்வாக அதிகாரி, மேலாண் இயக்குநர், அடுத்து உட் தலைவர் என்று படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

தற்போது இணை நிறுவனராக இருந்துவரும் நிலையில் தன்னை வளர்த்தெடுத்த பாம்பே ஐஐடி நிறுவனத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இதற்கு முன்பு அதே நிறுவனத்திற்கு ரூ.80 கோடியை நன்கொடையாக அளித்த நிலையில் இதுவரை அவர் ரூ.400 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய நந்தன் நீலேகணி ‘ஐஐடி – பாம்பே என் வாழ்க்கையின் எனக்கு அடித்தளமாக அமைந்தது. எனது பயணத்தின் துவக்கப்புள்ளி. இந்த நன்கொடை நிதி சார்ந்த பங்களிப்பு என்பதை விடவும் அதிகம். எனக்கு அனைத்தும் அதிகம் கொடுத்த இடத்திற்கு நான் செய்யும் ஒரு மரியாதை இது. நாளை நம் உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு‘ என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வாடாத ஒரு செடியில் இத்தனை நன்மைகளா? பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

கீரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஏராளமாக கேட்டிருப்போம். ஆனால் பிரண்டை என்ற வாடாத கீரையைக் குறித்து நகரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் 'லியோ' படம் தான் முதல் முறை.. ஒளிப்பதிவாளர் பகிர்ந்த வீடியோ வைரல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படம் குறித்த ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் முதல்முறையாக KOMODO X என்ற கேமராவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம்

500க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவியை கண்டுகொள்ளாத மீடியா.. கெளரவப்படுத்திய விஜய்..!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த கல்வி விழாவில் அந்த மாணவியை கௌரவப்படுத்திய

'லியோ' படத்தின் 'நான் ரெடி' பாடலை விஜய்யுடன் பாடியது இந்த பிக்பாஸ் பிரபலமா? 

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள  'நான் ரெடி' என்ற பாடல் அவரது பிறந்த நாளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாடல் குறித்த சில

நீச்சல் குளத்தில் உணவு.. அந்தரத்தில் ஊஞ்சல்.. தமிழ் நடிகையின் மாலத்தீவு போட்டோஷூட்..!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவு அரசு தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்துவதற்காக நடிகைகளுக்கு