ஒரே நாளில் இரண்டு விழா கொண்டாடிய இனியா.. என்னென்ன சேஷங்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு தொடங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.
நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான சந்திப்பாக அமைந்தது. இதில் திரை பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடிகை இனியா மற்றும் அவரது அனோரா ஆர்ட் ஸ்டூடியோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து மழையில் நனைந்த இனியா தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments