'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் 'சென்சார்' தகவல்

  • IndiaGlitz, [Sunday,August 25 2019]

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை இந்துஜா. இவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சூப்பர் டூப்பர்'. இந்த படத்தில் துருவா என்ற நடிகர் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஷாரா.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்ள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

முழுக்க முழுக்க காமெடி அம்சங்கள் கொண்ட இந்தப் படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்கார்த்திக் என்ற ஏகே இயக்கியுள்ள இந்த படத்திற்கு துவாகரா தியாகராஜன் என்பவர் இசையமைத்துள்ளார். தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை முகன்வேல் படத்தொகுப்பு செய்துள்ளார்.